பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

221

அனுப்பவில்லை. அவர் இன்னும் சம்பளம் வாங்காமல் இருக்க முடியாது.

தமிழ்ப் புலவருள்ளும் திருடரும் கொள்ளைக்காரரும் இருப்பதை என் பட்டறிவிற் கண்டுளேன்.

நா.செ. 3 சுறவம் 2001

பிரித்துப்பாட விரும்பாமை

க் க

திருமண வாழ்த்தில் ஆசிரியப் பாவிற்குரிய அகவலோசை பற்றி அம்மை என்னும் ஈற்றைக் குறைத்தேன். 'பிச்சுமணி பகவதியம்மையார் பேணி பேணி என இக் காலத்தார் பாடவுஞ் செய்வர். ஆயின் தூக்கு என்னும் ஓசை இலக்கணம் வழுவும். பிச்சுமணியும் பகவதியம்மையும்” என ருவர் பெயரையும் பிரித்துப் பாட நான் விரும்பவில்லை.

மனமாற்றம்

ந.பி. 22 அலவன் 2001

பெரியார் மூடநம்பிக்கை யொழிப்பு மாநாட்டில், எந்த வேளையும் பிரிந்துபோகக்கூடிய வணிக ஒப்பந்தமே மண வாழ்க்கை என்னும் தீர்மானத்தை நிறைவேற்ற உடந்தையாக இருந்தது மட்டுமின்றி, அதை 'மெயில்' தாளில் தற்காத்தும் உள்ளமை கண்டபின்தான் என்மனம் மாறிற்று.

தி.சை.சொ. 8 மீனம் 2002

ஆட்சித் தவறுகள்

1. ஆங்கிலத்தைக் குறைத்துத் தமிழரை அறிவிலிகளாக்குதல்.

2.

3.

4.

5.

6.

உழவரைத் தக்கவாறு போற்றாமை.

போக்குவரத்துத் துறையை அரசியற்படுத்தித் தாறுமாறாக நடத்தி

வருகை.

சூதாட்டு வகையில் அரசிறை தேடித் திருவள்ளுவர்க்கும் தமிழ் நாட்டிற்கும் இழிவுண்டாக்கியமை.

மாணவரைக் கட்சிச் சார்புபடுத்தி அவர் கல்வியைக் கெடுத்து வ வருகை.

தமிழை வளர்ப்போமென்றும் இந்தியை ஒழிப்போமென்றும் வாய்நேர்ந்ததை நிறைவேற்றாமை.