பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

செய்திகளைப் பாகி (பத்தி)யாகப் பிரித்துக்கொண்டு எழுதுவார். எழுத இடமில்லாதபோது ஓரத்திலும், உச்சியிலும், ை மடுத்தும் எழுதுவதும் உண்டு. எந்நிலையில் எழுதினாலும் பாவாணர் கடிதங்களில் எப் பிழையைக் காணவும் இயலாது, சந்திப் பிழையோ வாக்கிய அமைப்புப் பிழையோ எழுத்துப் பிழையோ அவர்தம் கடிதங்களில் ஒன்றிற் கூடக் காணற்கு இயலாது. அவரே எழுதமுடியாத நிலையில் - தம் கண்ணுறுவை செய்யப்பட்டபோது - பிறிதொருவரைக் கொண்டு எழுதுவித்த இரண்டு கடிதங்களில் மட்டுமே சில பிழைகளைக் கண்டதன்றி அவர்தம் கடிதத்தில் பிழை கண்டதே இல்லை! ஏனெனில், விரைவு, கவனக் குறைவு, மயக்கம், ஐயம் இவற்றால் கடிதங்களில் பிழை நேர்தல் கண்கூடாகக் காண்கின்றோம் அல்லமோ! இந்நிலை பாவாணரிடத்துத் தலைகாட்டியதே இல்லை என்க.

தொடக்க நாள் கடிதங்களில் ஓரிரு வடசொற் கலப்பும் ஆங்கிலச் சொல் பெய்வும் இருந்தன. ஆனால் அவை சில் லாண்டுகளில் இருந்த இடமும் தெரியாமல் மறைந்தன. ஆகலின், கடிதக் ‘கால உணர்வும்’ கற்பார் கருதத்தக்கதாம்.

பி

பாவாணர் கையெழுத்து, பயிற்சியுடையாரால் மிக எளிமையாக அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய அமைப் னது. என்றும் ஏறத்தாழ ஒரே தன்மையதாக அமைந்தது. அவ்வெழுத்து ‘முத்துக் கோத்து வைத்தாற் போன்றது' என்று கூற முடியாததுபோலப், படிக்க முடியாதது, படிக்கப் படும் பாடு படுத்துவது என்ற கூறவும் முடியாதது. பொதுவில் எவரும் படித்து அறிந்துகொள்ளத்தக்க பொது நிலை எழுத்து என்பது தகும்.

கடிதத்தின் முடிவில் கையெழுத்திற்கு முன்னே மிக அரிதாக ‘அன்பன்' என்பதை எழுதிக் கையெழுத்திடுவார். பெரும்பாலான கடிதங்களில் ‘அன்பன்' என்ற குறிப்பும் பொறிப் பதில்லை.

ஞா. தேவநேயன் என்று முழுக் கையெழுத்துப் போடுதல், ஞா.தே. எனச் சுருக்கக் கையெழுத்திடுதல் என இரு முறை களையும் பாவாணர் கையாண்டுள்ளார். செய்திகளுக்கு இடம் போதாத கடிதங்களில் 'ஞா.தே' என்பதையும் வடவிடுத்துள்ளமை சில கடிதங்களில் காண இயல்கின்றது.

பிள்ளை, முதலியார், நாள், மாதம் என்பவற்றைப் பாவாணர் சுருக்கெழுத்தில் எழுதுவதே பெருவழக்கு. இணைப்பெழுத்து களையோ (க்கு; த்து என்பவற்றை இணைத்து எழுதும் எழுத்து)