பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

231

5. உ.த.க.வும் பணியும்

கட்சிச் சார்பு

கழகம் கட்சிச் சார்பு கடுகளவுமின்றித் தமிழ்வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது.

தலைவர்கள் நிலை

.அ.க. 31.12.68

மாவட்டத் தலைவருள் சிலர் ஊக்கம் விஞ்சியவர். பலர் குன்றியவர். ஒருசிலர் இல்லாதவர்.

நா.செ.உ. விடை 2000

விழாக்கள்

(திருக்குறள் மரபுரை) வெளிவந்த பின்னரே இதன் வெளி யீட்டு விழாவொடு உ.த.க. ஆட்டை விழாவும், திருவள்ளுவர் ஈராயிரவாட்டை விழாவும் நடைபெறவிருக்கின்றன.

அஞ்சல்

மா.இரா.28 கும்பம் 2000

உ.த.க. தொடர்பான இருவகை அஞ்சலகட்கும் எனக்கு ஆண்டுதோறும் 5 உரூபா கொடுத்துவிடல் வேண்டும். இம் மாதமே எனக்கு 2 உரூபா ஆகிவிட்டது.

உறுப்பினர் தகுதி

நா.செ. 5 மேழம் 2001

உறுப்பினர்க்குத் தனித்தமிழாற்றல் இருக்கத் தேவை

யில்லை. அதன்மீது பற்றிருந்தாற்போதும்.

நா.செ. 28 அலவன் 2001