பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

15

சீர்திருத்த எழுத்து என்று இந்நாள் சொல்லப்படுகின்ற எழுத்துக் களையோ பாவாணர் கையாண்டதில்லை. அதனைக் கண்டித்தும் எழுதியுள்ளார். பெரியார்க்கே இச் சீர்திருத்த எழுத்தில் ஆர்வம் இல்லை என்றும், சிக்கனம் கருதிய கருத்தால் பயன்படுத்தினார் என்றும், தமக்கு வழங்கிய பட்டம் ஒன்றில் சீர்திருத்த எழுத்தைக் கையாளாமலே எழுதியளித்துள்ளார் பெரியார் என்றும்

கூறுகிறார் பாவாணர்.

க் கடிதங்களால் அறியப்படும் செய்திகள் இவையென முதற்கண் சுட்டப்பட்டது. இச்செய்திகளின் பயன் ைெவ யெனவும் சொல்லப்பட்டது. அவற்றோடு, உணர்ந்து கொள்ள வேண்டிய செய்திகளும், பாவாணர் உள்ளத்தைத் தெள்ளென வெளிப்படுத்தும் குறிப்புகளும் பலப்பல இத்தொகையில் இடம் பெற்றுள என்பதை ஆர்வலர்கள் நன்கனம் அறிந்துகொள்வர்; அவர்க்கு, இத்தொகுப்பு அறுசுவை விருந்தென அமைதலையும் கண்டுகொள்வர். இது சிறிய அளவிலேனும் பாவாணரைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு முயற்சியாகக் கருதப்படும் என்பது எளியேன் நம்பிக்கையாகும்.

“எளிய நிலையில் இருப்பவனும், முகமன் கூறிப் பிறரைப் புகழும் இயல்பில்லாதவனும், புலவரும் விரும்பாத தனித்தமிழ் நடையி னனும், ஆரியத்தை வன்மையாய் எதிர்ப்பவனும் ஆகிய என்னை என்று பாவாணர் தம்மைத் தாமே படம் பிடித்துக் காட்டும் இக் காட்சி அவர் கடிதத்தால் அன்றி எப்படிப் பெற முடியும்?

என்

66

அருணாசலம், எனக்கு ஒன்றும் தெரியாதென்றும், அவன் எனக்குக் கற்பித்து எம்.ஏ., பி.ஓ.எல்., பட்டங்கள் வாங்கிக் கொடுத்தாகவும் அவன் பொத்தகங்களிற் சிலவற்றை நான் திருடியதாகவும், அச்சகத்திற் சொல்லியிருக்கிறான். இது எத் துணை நகைச்சுவையும் வேடிக்கையுமான செய்தி என்று தம்மேல் சுட்டப்பட்ட பழிகளைத் தாமே நகைத்துப் புறத்தே ஒதுக்கித் தள்ளுதலை அவர் கடிதத்தால் அன்றிப் பெறுதற்கு இயலாதே! இப்படி எத்தனை எத்தனை பாவாணர் ஓவியக் காட்சிகள்!

இத்தொகை நூல் உருவாக்கம் நூல் உருவாக்கம் என்னுள் உருவாகிய காலையில், என் உணர்வை மதித்துக் கடிதங்கள் உதவிய சான்றோர் களையெல்லாம் சுட்டியுள்ளேன். அவர்களுக்கெல்லாம் நெஞ் சார்ந்த நன்றியுடையேன். பாவாணர் கடிதத் தொகுப்புகளை யெல்லாம் நன்கனம் பயன்படுத்திக் கொள்ள உதவியதுடன்,