பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

241

எதிர்ப்பு

முதன்மொழி விரைந்து வெளிவரல் வேண்டும். அது வரும்வரை நாற்பக்க இதழொன்று நடத்துவது தக்கதே. மதுரை மாநாட்டுக்கு வர இயலும். உ.த.க. உறுப்பிரெல்லாம் வந்து தமிழுக்கு மாறான கட்டுரைகளையும் முடிபுகளையும் எதிர்க்கவேண்டும் என்பதையும், மாநாடு நடைபெற வேண்டிய முறையையும் அங்கு அடிப்படையாகச் செயல்படவேண்டிய முடிபுகளையும் அதில் தெரிவிக்கலாம். அதன் அடக்கச் சலவைக் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம். மதுரை மாநாட்டு வரவேற்புக் குழுவில் என்னைச் சேர்ந்திருக்கின்றனர். ஆதலால் அங்குச் செல்ல நேரும். நீங்களும் வேறு சிலரும் அங்கு வருவது நன்றே. அதற்கு அணியமாகுக.

திருத்தல்

கு.பூ. 17.8.79

அடுத்த மாநாட்டைத் திராவிட மாநிலக் கிளைகளையும் சேர்த்துத் திருநெல்வேலி - பாளையங்கோட்டையிலே சிறப்பாக நடத்தி அங்குள்ள ஆரிய-அடிமைகளைத் திருத்தல் வேண்டும். இருபத்தையாயிரவர்க்குக் குறையாத ஒரு மா பேரூர் வலமும் இசைகூத்துகளுடன் நடத்திக் காட்டல் வேண்டும்.

கு.பூ.24.7.80