பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஈரிலக்கம்

திருவாருரில் நான்

பேச

முதலமைச்சரைக் கண்டு வில்லை. மேடையில் அரைமணிநேரம் சொற்பொழிவாற் னேன். அதன்பின் முதலமைச்சர் உரை நிகழ்த்தும் போது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிக்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகச் சொன்னார். அது என்று எவ்வழி எவ்வாறு என்பது இன்னும் தெரியவில்லை.

·

வ.சு. 3.1. 74.

அகரமுதலி

ஆங்கிலப் பேரகர முதலிக்கு 70 ஆண்டும், சென்னைப் பல்கலைக்கழக அகர முதலிக்கு 23 ஆண்டும் சென்றன. நம் அகரமுதலி பத்தாண்டுள் முடிந்து விடும். மூவாண்டு கடந்து விட்டன.

வரு

அகரமுதலி

கா.இ.மு. 22.1.74.

அகரமுதலி அரைக்கலைக்களஞ்சிய முறையில் விரிவாக கின்றது. இலக்கியச் சொற்களைத் தொகுக்கவும் படி யடுக்கவும் துணைவர் இருவர் வேண்டும். நானே இவ் வேலைகளைச் செய்யின் காலங்கடப்பதோடு என்கையும் விழுந்துவிடும்.

முதன்மடலம் முதற்பகுதி வெளியிடவும் பன்னீராயிரம் உருபா வேண்டும். பணமனுப்பும் உறுப்பினர் தொகை 160- லிருந்து வரவரக்குறைந்து இன்று நாற்பதாகி உள்ளது. ஆகவே அரசின் உதவி இன்றியமையாதது. தை முதலமைச்சர்க்கு நேரில் விளக்குவேன்.

கா.இ.மு, 22.1.74.

முதல்வர் உரை

2.12.73 திருவாரூரில் முதலமைச்சர் அகரமுதலிக்கு ஈரிலக்கம் ஒதுக்குவதாகச் சொன்னது இன்னும் சொல்லளவாகவே உள்ளது. இதுபற்றி அவரைக் கண்டு பேச ஒரு நாட்குறிக்குமாறு புலவர் கோவை வ ளஞ்சேரனைக் கேட்டிருக்கின்றோம். இன்னும் நாள் வாய்க்கவில்லை.

கா.இ.மு. 22.1.74