பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




274

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கல்

நினைப்பூட்டல்

புதிய அரசமைப்பால் தமிழுக்கோ செ.சொ. அகரமுதலித் திட்டத்திற்கோ நலமான தொன்றும் விளையவில்லை. தமிழிலக்கியச் சொற்றொகுப்பாளர் புலவர் இளங்குமரனார், ட்டுச் சொற்றொகுப்பாளர் பேரா. சதாசிவனார், மருத்துவச் சொற்றொகுப்பாளர் பர். வேங்கடேசனார், பதிப்பாண்மை எழுத்துறவாளர் தலைமகன் (Capt.) அசரியா ஆகிய நால்வரையும் உடனே அமர்த்துமாறும் எனக்கு ஒரு தூதன் இயங்கியும், இல்லத்தொலைபேசியும் உதவுமாறும் மீட்போலையில் தடித்த எழுத்தில் வேண்டுகோள் விடுக்க. இங்ஙனம் விடுக்குமாறு ஒவ்வோர் உ.த.க. கிளையையு தூண்டுக. இது நிறைவேறும் வரை மாதந்தொறும் நினைப்பூட்டு விடுக்குமாறும் வேண்டு.

தொடர்ந்து செய்க

கு.பூ. 29.7.80

நுங்கள் தீர்மானமுடங்கல் வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி. ஆனால் இது போதாது. ஒருமுறைத் தீர்மானத்தை நிறை வேற்றும் அரசு இன்றில்லை.

தமிழிலக்கியச் சொற்றொகுப்பாளர் புலவர் இளங்குமரன், கல்வெட்டுச் சொ.தொ. பேரா. சிதாசிவம், மருத்துவச் சொ.தொ.பர்.வேங்கடேசனார், பதிப்பாண்மை எழுத்துறவாளர் தலைமகன் (Cat.) அசரியா ஆகிய நால்வரையும் உடனே அமர்த்துமாறு அமர்த்தும் வரையும் மாதந்தோறும் தீர்மானம் விடுத்துக் கொண்டேயிருக்கவேண்டும். அமர்த்தினவுடன் தரிவிப்பேன். தமிழ் நிலைமை வரவரக்கெட்டுக்கெட்டு வருகின்றது. தமிழுக்கு மாறான திட்டங்கட்குத் தாறுமாறாகவும் ஏராளமாகவும் செலவிடப்படுகின்றது.

பிற அகரமுதலிகள்

அ.வா.வெ.செ. 29.7.80

திரு. அசரியா செ.சொ. அகரமுதலிப் பதிப்பாண்மை எழுத்துறவாளராக 1200 உருபா நிலைத்தமாதச் சம்பளத்தில் ஒப்பந்தமுறையில் ஓராண்டிற்கு அமர்த்தப்பட்டுவிட்டார்.30.8.80

அன்றே பணியேற்றார்.