பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




278

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உயர்நிலைப் பள்ளியில் இருந்துகொண்டு செல்விக்

கட்டுரை விடுப்பினும், தமிழாராய்ச்சி நூல் வெளியிடினும் அகர முதலிப் பணிபோற் சிறந்த தொண்டாகாது. முந்தியே வேலைவிடாது ஒட்டிக்கொண்டிருந்திருந்தால் இதற்குள் சம்பள உயர்வு பெற்றிருக்கலாம். புறத்திருந்து வேண்டுவதினும் அகத்திருந்து கேட்பது வலியுறும்.

அகர முதலிக்குப் பயன்படாத பலர் இவ்வகரமுதலித் திட்டக் கணக்குத் துறையில் அமர்த்தப்பட்டு வேலையின்றிச் சம்பளம் வாங்கிவருகின்றனர். சொற்றொகுப்பாளர் (புலவர் இளங் குமரனார், பேரா. சதாசிவனார், பேரா.வேங்கடேசனார்) மூவரை அமர்த்துவர் என்னும் நம்பிக்கையில்தான் கணக்குத் துறைப் பணியாளரை அமர்த்த இசைந்தேன்.

நீங்கள் அகர முதலிப் பணியிற் சேர்ந்து கொண்டால் பேராசிரியச் சம்பளத் திட்டத்தையும் நாளடைவிற் பெற்றுக் கொள்ளலாம்.

இரா.இ. 20.11.80