பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




280

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கண்காணி

கண்காணி என்பதிலும் கண்காணிப்பாளர் என்பது கண்ணியமானது. Supervisor ஐ மேற்பார்வையாளர் எனலாம். மேற்பார்வையர் அலுவற்பெயரும் இடம்நோக்கி வேறுபடுவது

நன்று.

கோயிலை மேற்பார்க்கும் துணை அதிகாரிக்கு இளங் கேள்வி என்று கல்வெட்டில் வழங்குகின்றது. தலைமை அதிகாரி முதுகேள்வி எனப்பெறுவார்.

தோட்டக்காட்டுக் கூலியாட்களின் தலைவனை அல்லது மேற்பார்வலனைக் கண்காணி என்பது உலக வழக்கு.

நல்லசொற்கள் இலக்கியத்திலும் கல்வெட்டிலும் உள்ளன. ஆயின், அரசினர் அவற்றை விரும்பாததுடன் தகுதியற்ற மொழி பெய்ர்ப்பாளரும் தமிழ்ப்பேராசிரியரும் தக்கார்மீது அழுக்

காறும் கொள்கின்றனர்.

Passport - கிள்ளாக்கு.

இவ்வருமையான சொல் தாயுமானவர் பாடலில் வரு கின்றது. ஆயினும் இதை அறியாது, சென்னைப் ப.க.க. ஆங்கிலத்தமிழ் அகரமுதலியில்,

1. பயணக் கடவுச்சீட்டு

2. பயணவுரிமை தரும்சீட்டு

3. நுழைவுரிமை தரும்சீட்டு என மொழிபெயர்த்திருக் கின்றனர்.

பிச்சு

சு.பொ. 3.1.67

பிச்சு என்பது பித்து என்பதன் திரிபானால் தென் சொல்லே. பிச்சை என்பது தான் வடசொல்.

அழகரசன்

22 மடங்கல் 1999 ந.பி.

சுந்தரராசன் என்னும் பெயரையும் அழகரசன், அணி வேந்தன், எழில்மன்னன் என்பவற்றுள் ஒன்றாக மாற்றிக் கொள்க.

3 மேழம் 1999 ந.பி