பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

287

தமிழ்ப்போற்றி

திருக்கோவில் தமிழ்ப்போற்றி' அச்சாகிவிட்டதா? ஆனவுடன் அதன் ஆசிரியர்க்கும் ஒருபடி அனுப்பி விடுக. அவர் முகவரி :

அறுவை மருத்துவர் (Dr)நமச்சிவாயம், எல்.எம்.பி.,

சூரமங்கலம், சேலம் சந்திப்பு, சேலம் கா.இ.மு. 7.2.74.

இளநீர்

சென்ற செல்வியிதழில் திரு.பி.எல்.சாமி வரைந்திருக்கும் சொல்லாராய்ச்சி முற்றுந்தவறானது. இளநீர் தூய இளநீர் தூய தென் சொல்லே. இதுபற்றிய ஒருவிளக்கக்கட்டுரை விரைந்து ஏதேனுமோர் இதழில் வெளிவரும்.

வ.சு.1.4.74.

தமிழ்ப்பெயர்

வசந்தகுமாரி - இனவேனிற்குமரி

திருமணத்திற்குரிய முழுத்தவோரையும் நாண்மீனும் தெரிவிப்பின் தமிழ்ப்பெயர் எழுதிவிடுக்கின்றேன்.

மு.வ.ப. 18.12.74.

பொக்கசம்

நிதி என்னும் வடசொற்கு நேர்த்தென்சொல் பொக்கசம் (பொக்கிஷம்) என்பதே. இது வடமொழியில் இல்லை. தெ.பொக்கசமு. க. பொக்கச. ஷகரம் பிற்கால மாற்றம்.

பணத்துறையமைச்சர் என்பதைவிடப் பொக்கச அமைச்சர் என்பது மிகப் பொருத்தம். இதுபற்றிச் ‘செல்வி'யில் ஒரு கட்டுரை வரைவேன். கா.இ.மு. 14-4-75

Terry - Cotton -

-

திறலியன்

திறலின் என்பது திறலியன் என்றிருக்க. இன் என்னும் ஈற்றைவிட இயன் என்பது பொருள் உள்ளதும் சிறந்ததுமாகும். திறம்-திறன்-திறல்-திறலியன்.

ஒலியொடு பொருளும் ஒத்துவரின், அயற்சொற்களின் ஒலியொட்டியே தமிழ்ச் சொல்லும் புனைந்து கொள்ளலாம். இது ஒருவகைச் சொல்லாக்க நெறிமுறை.