பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




304

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

இணைப்பு

தமிழர் மதம்

று

பிள்ளையார் வணக்கம் தமிழரதன்று. கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்குப்பின் ஆரியர் புதிதாகப் படைத்தது. ஓ என்ற மூலமந்திர வாக்கு யானை வடிவொத்திருத்தல் பற்றி யானை முகத்தெய்வமென்று தோற்றி, சேயோன் அல்லது சிவன் என் ஒரு தெய்வமாக இருந்ததை வேறு தெய்வமாக வகுத்துத் தந்தையும் மக்களுமாகக் கட்டிப் புராணங்களும் வரைந்து, தமிழரின் உயர்ந்த கடவுள் மதத்தைச் சிதைத்து ஆரியப் படுத்திவிட்டனர். மாந்தன் முகத்திலேயே கடவுள் இல்லை. அங்ஙன மிருக்க யானை முகத்தில் எங்ஙனம் இருக்க முடியும்? சிவவணக்கம் அல்லது கடவுள் வணக்கம் இருந்தாற் போதும். தன் விரிவான விளக்கத்தை என் தமிழர்மதம் என்னும் நூலில்தான் காணமுடியும்.

மணமக்கள் பிள்ளைகளைப் பெற்றுக் குடும்பம் பெருகி வழிவழி தொடர்ந்து வருவது அருகம்புல் வேரூன்றல் போல் இருத்தலால் அறுகையும் உணவுத் தட்டில்லாமல் வாழவேண்டு மென்று அரிசியையும் அடையாளமாகத் தூவி வாழ்த்தினர் முன்னோர். இக்காலத்தில் அவ்வடையாளமின்றியும் வாழ்த்த

லாம்.

ஐம்பூதங்களுள் நீ தெய்வத் தன்மையுள்ளதென்று தெய்வச் சான்றாக விளக்கேற்றி மணமக்கள் சூளிட்டனர். கடவுளை உள்ளத்திலேயே தொழலாம். ஆரியர் கடவுள் வணக்கமாகத் தீயையே வணங்கி வந்ததால் தீவலம் வருவதைச் சடங்காகக் கொண்டிருந்தனர். அது தமிழர் வழக்கமன்று. கடவுள் எங்கும் நிறைந்திருப்பதால் உள்ளத்திலேயே எண்ணிச் சூளிடலாம்.

6

க.பெ.சி.க. ஆடவை 2000