பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




306

L

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

மீண்டும் பணம் வேண்டியிருப்பின் அனுப்ப வேண்டேன். நான் எங்கேனும் கடன் வாங்கிக் கொள்வேன். அதைப் பின்னர் வெள்ளாமைப் பணம் வந்தபின் அனுப்பலாம். அதற்கு ஓராண் டாயினும் குற்றமில்லை. கடன் வாங்கியேனும் இடர்ப்பாட் டேனும் பணம் அனுப்பவே வேண்டேன். நான் கடன் கொள்வ தென்பது பொத்தகப் பணத்திலிருந்து எடுத்துக் கொள்வதே யன்றி வேறன்று. அது எளிதாய் இயல்வது. பயிர்த்தொழில் ம்மியும் பணத் தட்டியின்றி நடைபெறல் வேண்டும். கடனில்லாச் சோறு கால்வயிறு போதும்! எனக்குப் பணம் அனுப்புகிறேன்' என்று சொல்லி விட்டதனால், கடன்பாட் டுணர்ச்சியுடன் காலம் கழிக்கவேண்டன். முழுவுரிமையுள்ளத் துடன் இல்லறம் நடத்துக.

க.பெ.சி. ச. மடல்கல் 2000

வேண்டேன்

பணம் அனுப்பவேண்டேன். இறைவன் வேறொரு வழியில் எனக்குதவி யிருக்கின்றான். மேலைத் தாம்பரத்தில் 2 மாதம் திரு. முத்துக்கிருட்டிணார் வீட்டில் தங்கி நேற்றுத்தான் இங்கு (காட்டுப்பாடி) வந்தேன். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்தேவிட்டார். என்னை விருந்தோம்பின் செலவு 250 உருபா ருக்கும். அங்குத்தான் திருக்குறள் உரையெச்சம் முற்றும் எழுதப்பட்டது.

வாய்ப்பு இழப்பு

க.பெ.சி. 13 துலை 6.12.74

நும்மிடம் என்றும் உதவிபெறலாம். பிறரிடம் பெற

முடியாது.

நும் அன்புப் பெருக்கத்தாலும் ஆர்வமிகுதியாலும் பறம்புக்குச் செட்டியார் ஒருவர் கொடுக்க விருந்த பணத்தை நீரே கொடுக்க ஏற்றுக்கொண்டீர். அதனால் அவரிடம் பெறும் வாய்ப்புப் போய்விட்டது. வருந்தினேன்.

தைத்தான் அன்று கருதி

க.பெ.சி; 2 மடங்கள் 2001