பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவாணர் பாடல்கள்

தொகுப்பாளர் தொகையுரை

பாவாணர் பாடல்கள் என்னும் இச்சுவடி இதன் பாடு பொருளுக்கு ஏற்பப் பத்துப் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

நூன்முறையில் பாயிரம் என்பதொன்று; அது முதன்மை யானது; இடத்தால் மட்டுமன்றிப் பொருளாலும் முதன்மை யுடையதே. ஆகலின், "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்” போல்வது என முன்னையோர் கூறினர். அதற்கு, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

எனப் பல்வேறு பெயர்களைக் குறியீடும் செய்தனர்.

பின்னே வரும் யானையை முன்னே மணியொலியால் காட்டுவது போல்வதும், பறையறைதலால் யானை வரவை உரைப்பது போல்வதும் பாயிரம்எனினும் தகும்.

“வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச் சிறப்பென்னும் பாயிர மாம்

என்பது சிறப்புப் பாயிர இலக்கணம். அவ்வகையில் இப்பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து (2) பாயிரம் (7) அவையடக்கம் (2) அவையடக்கப் பாடல் படிமாற்றம் (1) ஆகப் பன்னிரு பாடல்கள் உள. (1-12) இவற்றுள் நேரிசை வெண்பா (2) குறள் வெண்பா (3) கலிவிருத்தம் (7) என்னும் பாவகைகள் இடம் பெற்றுள. இவை இசைத்தமிழ்க் கலம்பகம், தமிழர்மதம், பழந்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு, வடமொழி வரலாறு, முதல் தாய்மொழி என்பவற்றுள் உள்ளன.

ல்

தில்

இதன் இரண்டாம் பகுதி வாழ்த்து என்பது. திருமண றைவணக்கம் (1) இறைவேண்டல் (1) இசையாசிரிய வணக்கம் (1) திருமண வாழ்த்துப்பா (15) மங்கல நீராட்டுவிழா வாழ்த்து (1) மக்கள் மக்கள் வாழ்த்து(3) பெருமக்கள் வாழ்த்து