பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

27.

345

ஒருமன வாழ்வில் உலகிய லின்பம்

நிறைவுற வாழ்க நிலமிசை நெடிதே.

மங்கலத் திரு. இளங்கோ இராசேசுவரியார்

திருமண வாழ்த்து

இளங்கோ விராசே சுவரியர் நல் லின்ப வளங்கோள் வகைநீடி வாழ்க - விளங்கியினி வண்டமி ழோங்குதிரு வள்ளுவ வாகையறம் எண்டிசை யேந்த வினிது.

- 15.1.76.

- 18.5.76 புலவர் இளங்குமரனார்க்கு

வாகை - வெற்றி

6

மங்கலத் திரு. மெய்கண்டான் சீதாவர்

திருமணவாழ்த்து

28. மெய்கண்டார் காணன்பு மெய்யன் திருவருளால் மெய்கண்டார் சீதையர் மேவிநிலை - மெய்கண்டு மெய்யின்பந் துய்க்க மிகுநாள் மனையறமும் மெய்யின்பப் பண்பு மிக.

மெய்யன்

-

றைவன்; உரைவேந்தர் பேரா.

ஔவை.சு.து. அவர்களுக்கு விடுத்தது.

மேவி - அடைந்து; நிலைமெய்-

நிலைத்த மெய்ம்மை,

மெய்யின்பம் - உடலின்பம்.

மங்கலத்திரு. பாரதிஞானசோதியர்

திருமணவாழ்த்து

29. நேரிய தமிழ்மறை நெறியுற வகுத்த

சீரிய மனையறம் செம்புலம் பெய்த

நீரியல் நேய நீர்மிகு நெஞ்சம் பாரதி ஞான சோதியர் கலந்து

-25.10.78.