பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

“நான் சென்ற மீ 19, 20, 21, ஆம் உகளில் நெல்லை சென்று திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலுமாக 3 இந்தி யெதிர்ப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். பயன்படா விடினும் முதல் உழவென்று நினைக்க வேண்டியிருக்கிறது.

"முதலாவது, கூட்டத்திற்கே நம்மவர் வரவிடாதபடி தந்திரமாகக் கட்டுப்பாடு செய்திருக்கிறார்கள். வந்தாலும் தூர நின்று கேட்பதே யொழியக் கிட்ட வருவதில்லை. அதுவுங்கூட நான் காங்கிரசில் சேர்ந்திருப்பதினால். இப்போது நாம் தமிழைக் காக்க வேண்டுமானால் முதலாவது காங்கிரசில் சேர்ந்து கதருடுத்த வேண்டும். சுயராஜ்யத்திற்கு ஒன்று சேர்ந்து இந்திக்கு உள்ளிருந்தே எதிர்க்க வேண்டும். மற்றபடி நம்மவரைச் சேர்க்க முடியாது. நம் சொல்லும் பயன்படாது.

இந்த ஞாயிறு 10ம் ௨ சென்னையில் கூட்டமென்று பத்திரிகையிற் பார்த்தேன். 2 வாரமாய் இந்தியால் வருங்கேட்டை முற்றுமாராய்ந்து இன்று தமிழ் அடியோடு தொலைவதற்கு ஒப்பானதைக் கண்ணுறுகிறேன். எவரும் ஏற்கும்படி தக்க நியாயங் களும் விடைகளும் கண்டுள்ளேன். தயவுசெய்து அங்குப் போக வர முழுச் செலவு 7 ரூ கொடுக்க முடியாவிட்டாலும் அரைச் செலவிற்காவது ஒழுங்கு செய்க. அருமையான 30 பாட்டுகள் அச்சாகின்றன இவ் வெள்ளி வெளிவரும். அதனுடன் வருவேன்” ஞா.தே.

"ஓர் அனுபவசாலி சத்யாக்ரக முறை நன்றென்றார். நாம் கூடி ஆராயவேண்டும்”4

"உடனே 500 செந்தமிழ்ச் சின்னங்கள் தபாலில் விடுக்க எனது மாணவர் ஆவலாய் எதிர்ப்பார்க்கின்றனர். வரும் சனிக் கிழமை சேலம் அல்லது நாகை செல்வேன். இந்தியெதிர்ப்புச் சொற்பொழிவுக்கு.

பாலக்காட்டு ஆறுமுக முதலியார் M.A.,L.T., (govt college) கொடுமுடி எனது அத்தான் அ.எ. சீநிவாசகம் பிள்ளை (Drawing master SSV High School கொடுமுடி) என்னும் இவ்விருவருக்கும் ஒவ்வோர்படி செந்தமிழ்க் காஞ்சி விடுக்க.

2ம் பாகம் அடுத்த வாரம் வெளியாகும். அச்சுக் கூடத் திற்குக் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து விரைந்து விலையாக்கி அனுப்பிவிடுங்கள். யாராவது ரூ. 4. 5-10-37 (வ.சு.)