பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

393

புதிய முத்தமிழ் -

மு. ரா. பெருமாள் முதலியார் இயற்றிய

புதுநூற்பாக்கள்

நிலைமொழி யீற்றில் மெய்யெழுத் திருப்பின்

வருமொழி ரலவில் தொடங்கா தென்க;

அண்ணன் இராமன் என்றே எழுதுக: அண்ணன் ராமன் எனவன் றுணர்க

நிலைமொழி யீற்றில் உயிரெழுத் திருப்பின் வருமொழி ரலவில் தொடங்கலா மென்க தம்பி லக்குவன் என்பதே சாலும் தம்பி இலக்குவன் என்ப தெதற்கு?

இவற்றை மறுத்துப் பாவாணர் பாடியவை

270. நிலைமொழி யீற்றில் நிற்பது மெய்யேல் வருமொழி ரலமுன் வாரா வென்க

கலைமான் இரண்டு கண்டே விலக்கில் எனவுரைத் தெழுதுக இதுமுது நெறியே 271. நிலைமொழி யீற்றில் உயிரொலி நிற்பின் வருமொழி ரலமுன் வரலா மென்க

கலைமா ரெண்டுகாணுக லெக்கில்

எனவுரைத் தெழுதுக இதுபுது நெறியே

-

செ.செ. 52 : 550

என்று புணர்ச்சி யிலக்கணத்தை மாற்றவும் நேரும். இதன்

தீங்கை அறிஞர் கண்டு கொள்க.

-செ.செ. :586

ஒரு நூற்பா – வண்ணனை நூலின் வழு

272. “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

66

'எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியே"

ச.செ. 50:90