பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

31

“எனது மொழிநூலைத் திரு.சுப்பிரமணிய பிள்ளை போல்வாரே பார்க்கத்தக்கார். பெரிய ஆங்கில இலக்கணங்களை ஆதாரமாகக் காட்டியிருப்பதால் ஏனையோர்க்கு விளங்கா.”5

“என் முதற்றாய் மொழியை அச்சிட வேண்டும். அதன் பிறகுதான் எங்கள் பிரின்ஸிபாலுக்கு என் அறிவு வெளியாகும்.

“கட்டுரையில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஒவ்வொரு பகுதியும் ஆராய்ச்சி முடிவென்பது ஒருமுறை வாசித்தால் தெரியவரும்.”7

66

நான் அனுப்புவதில் ஒரு சிறிதும் விடவேண்டாம். ஏதேனும் பிறர்க்கு உடன்பாடன்றாயினும் அவர் கூறும் தடை கட்கெல்லாம் தகுந்த விடை கூறச் சித்தமாயிருக்கிறேன்'

66

228 '8

‘அகத்தியரும் தொல்காப்பியரும் ஆரியர் அல்லர் என்னும் திரிபுணர்ச்சி நமக்கு இன்னும் இருப்பதுபற்றி வருந்துகிறேன். செல்வியில் வெளியிடாவிடின் மட்டும் அவ்விருவரும் தமிழர் ஆய்விடுவரா? ஆரியர் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் இருக்கின்றன. என் கட்டுரைக்கு எவரேனும் மறுப்பெழுதினால் விடையளிக்கத் தயாராயிருக்கிறேன்

999

“திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே என்னும் பொருள் பற்றிய எனது இடு நூலை (Thesis)ப் பல்கலைக்கழகம் தள்ளிவிட்டது. இது எனக்கு வியப்பாக இல்லை. இவற்றைத் தமிழ்நிலை என்ன என்பதை மட்டும் தெரிவிக்கின்றது; இனி மேல் இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை. ஆகையால் எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் வெளியிடப் போகிறேன்.”10

நான் ஒரு பல்கலைக் கழகத் தமிழ் துறைத் தலைவனாயின் தமிழ் விரைந்து ஆக்கம் பெறும்.”1

66

‘மறைமலையடிகள்போல் வாய்மையும் பெருந்தன்மையும் வாய்ந்த புலவர் ஒருவரேனும் இன்றிலர். அமுக்கலும், தற் பெருமையும், குறுநோக்கும் சான்ற புலவரிடம் (பழந்தமிழாட்சி நூலைக்) காட்டிப் பயனில்லை”12

5. 29-7-31 (621.5)

7. 18-8-31 (வ.சு)

6. 14–8-31(உசு) இடம் மனனார்குடி பின்லெ கல்லூரி

8. 29-9-31 (621.)

10. 11-12-39 (621.)

9. 12-10-31 (வ.சு)

11.4-7-47 (வ.சு)

12. 3-1-52 (வ.சு)