பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

ஆயிர நரம்புறும் ஆதியாழ் வரையுள நரப்புக் கருவியின் நாயக மாக வலிவு மெலிவு சமனென வழங்கிய மூவகை நிலையும் ஒருநிலை இயக்கும் எழுநரம் புற்ற இன்னிசைக் கலமாய்ச் சங்ககா லத்திற் செங்கோட்டி யாழெனச் சிறப்புற் றோங்கிய செந்தமிழ்க் கருவி பண்டை நாளில் பழமலை என்னப் பெற்ற தமிழ்நகர் பிற்றை நாளில் விருத்தா சலமென வேறு பெயர்கொளல் போலும் இன்று வீணை என்றே வழங்கும் வகையை விளக்கித் தந்தனர் பாணர் கைவழி என்னும்

யாணர் நூலை யாவரும் கொளவே

405

பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் கழக வெளியீடு : 531 ; 1950. ஆசிரியர் டாக்டர் ஆ. வரகுணபாண்டியன்.