பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

66

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

முதல் தாய்மொழி உலக முழுதும் பரவ வேண்டிய நூல்களுள் ஒன்று. அதை ஒருமுறை முழுதும் படித்துவிட்டு உடனே அச்சிடுக. சுட்டு விளக்கம் எழுதும்போது ஆராய்ச்சிக் குறைவினால் சில அடிப்படையுண்மைகளைக் கண்டுபிடிக்க இயலாமற் போயிற்று. இன்று கண்டுபிடித்துவிட்டேன். ஆகை யால் இனிமேல் காலந்தாழ்க்காமல் என் வாழ்நாளெல்லாம் ஒவ்வொன்றாய் எழுதிக்கொண்டிருப்பேன்.28

வடமொழி வரலாறு வரையப்பட்டு வருகின்றது. அதன் பின் தலைநாகரிகம் எழுதப்படும். தலைநாகரிகம் முற்றும் வரலாற்று நூல் Wren & Martin நன்றாய் படித்திருக்கிறேன். தங்கள் விருப்பப்படி ஒரு நூல் எழுதவொண்ணும். ஆயின் தலைநாகரிகம் முடிந்தபின் தான் என்மனம் வேறொன்றிற் பதியும். பொறுக்க.29

66

30 வடமொழி வரலாறும், தலைநாகரிகமும் புகழ்வேண்டி எழுதுபவையல்ல. தமிழை வடமொழியினின்று மீட்டற்கு எழுதுபவை இத்துணைக் காலமும் (20 ஆண்டுகளாக) இதே நோக்குடன் கற்றும் ஆராய்ந்தும் இருக்கிறேன். ஆராய்ச்சி முடிந்தது. உண்மையும் கண்டுவிட்டேன். இதற்கென்றே கடவுள் என்னை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எனது உணர்ச்சி. அந்த ரு நூல்களும் கண்டால்தான் தங்கட்கு இவ்வுண்மை விளங்கும் “என் படிப்பும் ஆய்வும் முற்றும். இனி மாதம் 1 நூல் எழுத முடியும். அதற்குரிய ஓய்வும் இங்குண்டு

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே”

"32

1

31

என்று பெருமிதத்தின் நிலைக்களம் நான்கினைச் சுட்டும் தொல்காப்பியம். அந்நான்கனுள் தலையிடத்தைத் தலைமை யிடத்தாகத் தாங்கியவர் பாவாணர். அவர்தம் கல்வித் திறத்தை யும் ஆய்வு நுணுக்க அருமையையும் அறியாதார், தாம் எண்ணி யாங்குரைத்துத் தமக்குள் உவகையும் கொண்டனர். இந்நிலை யில் பாவாணர் வீறு எழுதல் இயல்பாயிற்று. 'தன்னுடை ஆற்றல் உணராரிடை வீறு மொழிதல் தகும் என்பது இலக்கண நெறியன்றோ!

29. 28-3-49 (61.)

30. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலுக்கு, முற்பட பாவாணார்கருதிய பெயர்போலும்!

31.6-4-49 (வ.சு)

32. 6-4-49 (வ.சு)