பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

35

5. மொழிநூல் முதன்மையும் தமிழியக்கமும்

பாவாணர் மொழிநூல் திறம் தனி மாண்பினது. அவர்தம் மொழிநூல் திறம், அவர் இயற்றிய அனைத்து நூல்களிலும் பளிச்சிட்டாலும் முதல் தாய்மொழி, ஒப்பியன் மொழிநூல் பற்றிய பாவாணர் உட்கிடை, கடிதங்களிடையும் திகழ்தல் இறும்பூது பயப்பதாம். அவற்றுள் கிடைப்பன பல இவண் அறிவன சில

66

எனது மொழிநூல் தமிழின் தமிழரின் சரித்திரத்தையே தொடக்க முதல் இறுதிவரை விளக்கமாய் எடுத்துரைப்பது. உங்கள் செல்விக்கு வற்றாத கட்டுரைக்கேணி. ஆரிய திராவிட வேறுபாடு, தமிழர் நாகரிகம். தமிழின் தாய்மை, ஆரியர் தமிழையும் தமிழரையும் கெடுத்த வழிகள், இனிமேல் தமிழை வளர்க்கும் முறைகள் முதலியன செவ்வனே விளக்கப்பட்டுள.

து வெளிவருமாயின் தமிழ்நாட்டில் ஒரு புத்துணர்ச்சியும் புதுக்கிளர்ச்சியும் தோற்றுவித்துக் காங்கிரஸ் தமிழரின் கண்ணைத் திறக்கும். ஆகையால் இதற்கு இயன்றவரை முயன்று பல்வகை உதவுக

991

“யான் இன்று முதற்றாய் மொழி வடமொழி வரலாறு என்ற இரு முதன்மையான நூல்களை எழுதுவதில் அழுந்தி யிருப்பதால் எங்கும் எதற்கும் வரமுடியாது. இவற்றை எழுதி முடித்தபின் தெரிவிப்பேன்'

"முதல்தாய் மொழி, வெளிவந்தபின் எல்லாப் புலவரும் சொல்லாராய்ச்சி செய்யவொண்ணும்

66

993

னிமேல் எந்நாட்டிலும் எழுதப்படும் மொழிநூலுக்கும் இதுவே அளவையும் அடிப்படையுமாகும். இது இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது.

994

1 .26-12-39 (வ.சு)

2. 33-4-48 (வ.சு)

3. 31-1-52 (வ.சு)

5. 3-4-51 (வ.சு)

4. 26-5-52 (வ.சு)