பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

66

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

“முதல் தாய்மொழி எதிர்காலத் தமிழ்நிலைக்கு அரணான அடிப்படை.”5

66

“முதல் தாய்மொழி என் முப்பதாண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. அதனால்தான் எதிர்காலத் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும். இதுவரை எழுதப்பட்ட சொல்லாராய்ச்சி மொழி யாராய்ச்சிநூல் போன்றதன்று! தமிழ்ப் பகையையெல்லாம் தலைம க்குவது. முதல் தாய்மொழி என்பது தமிழுக்கு உயிர் நாடி என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். அதைப் பார்த்த பின்பு தான் தங்கட்கு அதன் அருமை பெருமை புலனாகும். 20 ஆண்டு ஆராய்ச்சியின் விளைவு அது. இதற்காகவே என் பிற முயற்சிகளையெல்லாம் இதுகாறும் நிறுத்திவைத்திருந்தேன். இதுவும் Origin of Culture என்னும் ஆங்கிலப் புத்தகமும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ' வகை செய்யும் என்பதற்கு ஐயமில்லை”;

66

‘ஒரு வீட்டின் உரிமையைக் காப்பது ஆவணம், ஒரு நாட்டின் உரிமையைக் காப்பது உண்மை வரலாறு. நம் நாட்டு வரலாறு மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் இருக்கின்றது. இவற்றை ஆளுங் கட்சி ஆரியச் சார்பானது. தமிழுக்கும் தமிழர்க் கும் மாறானது. ஒரு நாட்டிற் பல நூற்றாண்டாகக் குவிந்து கிடக்கும் குப்பைக் கூளங்களை ஆறுதான் அடித்துக்கொண்டு போகும். அதுபோல் நீண்டகாலமாகக் குவிந்து கிடக்கும் ஆரியக் குப்பைகளை வரலாறுதான் அடித்துக்கொண்டு போக வேண்டும். மேனாட்டார் இந்திய நாகரிகம் ஆரியரது என்றும் தமிழ் சமற்கிருதத்தால் வளப்படுத்தப்பட்டதென்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். கால்டுவெலும் அதைத் தான் வலியுறுத்தி யிருக்கிறார். தமிழ் வடமொழித் துணையின்றித் தழைத்தோங் கும் என்று ஓரிடத்துக் கூறியிருப்பது முரணானது. நம்மவர் இன்னும் அவர் நூலைச் சரியாகப் படிக்கவில்லை.

“மேனாடு க்காலத்து அறிவியல் ஊற்றுக் கண். ஆயின் மொழிநூற்கு அடிப்படை தமிழாதலின் அதைமட்டும் மேனாட்டார் அறிந்திலர். அவர் ஒப்புமாறு தமிழ்த் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமைகளை நாட்டிவிடின் இங்குள்ள அறியாமையும் ஏமாற்றும் தாமாக நீங்கிவிடும். இப்பயன் நோக்கியதே என் The Primary Clacical Language of the World என்னும் ஆங்கில நூல். அதுவும் தமிழ் வரலாறும் இந்தியெதிர்ப்புப்

6. 17-12-51 (வ.சு)

7. 15-7-51 (வ.சு)