பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

41

என்னும் வேர்ச்சொல் விளக்கங்களை விரிவாகத் தொடங்கி, அதன்பின் வந்த சிலம்புகளில் வேர்ச்சொற் கட்டுரைகளே பெரும்பாலும் வரைகின்றார். 'வேர்ச் சொற் கட்டுரைகள்' என்னும் நூல் அவற்றைத் தொகுத்து வெளிவந்தது. மேலும் 'தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள்' என்னும் தலைப்பிலும் 25 கட்டுரைகள் வெளிவந்தன. நாற்பது ஆண்டு களுக்கு முன்னே சிற்றருவியாக வழிந்த வேர்ச் சொல்லாய்வு, பின்னே பொங்குமா கடலினின்று பொழியும் பேரருவியாக விளங்கித் தோன்றியமையைப் பாவாணரைப் பயின்றார் அனைவரும் அறிந்துகொள்வர்.