பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

7. சொல்லாக்க விளக்கங்கள்

பாவாணர் தொடர்பாளருள் பலரும் புலமைத் தொடர் பாளரே. அன்றியும், அவர் வழங்கும் ஒவ்வொரு சொல்லையும் முத்தென மணியெனப் போற்றி அவர் வழிப்பட்டு அவரை வீர வழிபாடு செய்வதில் விழுமிய இன்பம் காணும் பேற்றாளர் களே! ஆதலால், அவர்தம் சொல்லாய்வு பொருளாய்வு விளக்கங் களை வேண்டி வேண்டி அஞ்சல் வழியே பயன்கொண்ட வர்களே! அவருள் ‘தம் பொருள் தமிழ்ப் பொருளாம்' என்னும் உணர்வாளர் உதவிய கொடையே இப்பகுதிக்கு மூலமாம், வை பயன்பாடு கருதி அகர முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பொருளுக்கு உடையாரைச் சொல்தோறும் சுட்டக் கூடாமை யால் பொதுச் சுட்டின் அளவு அமைகின்றதாம்.

ஆதி:

ஆதல் = உண்டாதல், ஆ

எனலாம். ‘தி’ ஈறு.

இலக்கம் :

ாதல், ஆ-ஆதி தோற்றம், தொடக்கம்

=

இலக்கம் சாய்ந்தது என்னும் தொடர் குறிஞ்சிக் கலி மூலத்தில் உள்ளதாக எனக்கு நினைக்கவில்லை எக்கலியில் என்று திட்டமாய்த் தெரிவித்தால் பார்த்துச் சொல்கின்றேன்.

சமற்கிருதத்தில் நாரத்தைக்கு 'லக்ஷ' என்றொரு பெய ருண்டு. அது தமிழில் இலக்கம் என்றுதானிருக்கும்.

எல்லேயிலக்கம் என்று தொல்காப்பியத்திலிருப்பதால் இலக்கம் சாய்ந்தது என்னும் பொருள்படும், எல்=கதிரோன். உத்தரம், தக்கணம் :

உ+தரம்=உத்தரம். உயர்ந்த வடக்கு

தக்கு=தாழ்வு. தக்கு - தக்காணம், தாழ்ந்த தெற்கு