பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

உரு:

43

உருத்தல் = அழலுதல் (புற 25. 10).

உரு-குரு=வெப்பத்தால் தோன்றும் சிறு கொப்புளம். கரம் (இந்தி)-சூடு.

கிரீஷ்ம (வடசொல்)=கோடை.

சாணைக்கல்லில் நெருப்புத் தோன்றும்.

கபடு, என்று நீருயிரி ஒன்றுமில்லை. கமட(ம்)(வ) = ஆமை. இச்சொல் கமடு என்று வரலாம்.

குஞ்சு தின்னிக் காற்று = இச்சொல் உலக வழக்காயிருத்தல் வேண்டும். நூலாசிரியரின் சொந்த ஊர்ப்பக்கம் கேட்கச் சொல்க.

கிறுபம்=இச் சொல்லும் தமிழகர முதலிகளில் இல்லை. கிருத்திரிமம் (வ) குறும்பு. கிறாம்-குறும்பன் (யாழ்ப்பாண வழக்கு).

ஊழ் :

ஊழ்தல்=முதிர்தல், பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பன

போல்

(சீவக.1560)

ஊழ்த்தல்=முதிர்தல், காந்தளூழ்த்துச் சொரிவதுபோல்

ஊழ் =1. பழமை - “ஊழ்படு காதலாளை

(சீவக.1742)

(சீவக.1452)

2. பழவினை - “ஊழிற் பெருவலி யவுள” (குறள். 380)

3. முதிர்வு - பயம்புக் கூழுற்றலமரும் (மலைபடு. 133) ஊழ்-உழுவல்=பழமையாக அமைந்த வினை, செய்தான் அதன் பயன் நுகர வேண்டும் என்பது முறைமையாதலால் முறை என்பது ஊழ் என்பதற்கு வழிப் பொருளாயிற்று.

முறை=ஊழி, ஒழுங்கு, தடவை, செங்கோன்மை, அடைவு வரிசை (Turn)

பழமை=முறை, “யாழ்வழிப்படூஉம்”

முன்வினை முன்னும் பின்வினை பின்னும் வருவதனாலும்

ஊழ் முறை எனப்படும்.