பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

எரியம் :

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

நரகத்திற்குள்ள தமிழ்ச் சொற்கள் அளறு, எரி, நிரயம் முதலியன. அளறு திருவள்ளுவர் ஆண்ட சொல். அது, சேறு என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டது.

எரி - நெருப்பு, அதை அம் ஈறு சேர்த்து ‘எரியம்' என்று வழங்குவது தெளிவாயிருக்கும்.

நிரயம் என்பது நரகம் என்னும் வடசொல்லின் திரிபாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் அதை விட்டுவிட வேண்டும்.

கும்பி, புலவு, ஊழ்த்தல், அள்ளல், அருஞ்சிறை, இருள் என்று வேறு சில சொற்களும் பிங்கல நிகண்டில் நரகப் பெயரா கக் கூறப்பட்டுள. இவற்றுள் கும்பி வடமொழியிலுமிருப்பினும் கொள்ளத் தக்கதே, கும்புதல்=தீய்ந்து போதல். சோறு கும்பி விட்டது என்னும் வழக்கை நோக்குக. புலவு = வெறுப்பு, ஊழ்த்தல் = கெடுதல், அள்ளல் சேறு.

ஏரிக்காடு என்று யார் சொன்னது! ஏட்டுச் சான்றுண்ட ஏர்க்காடு, கொத்துக்காடு எனக் காடு இருவகை. முன்னது உழுவது, பின்னது மண்வெட்டியாற் கொத்துவது. 15-4-68

மலையடிவாரத்தில் ஏர்க்காடு இருந்தாலும் அப்பெயர் பெறும். ஏறைக்கோன் என்றொரு சிற்றரசன் புறநானூற்றிற் பாடப்பெற்றுள்ளான். ஏறைக்குட்டி என்று பெயர் கொண்டார் குமாரசாமிப் பட்டியிலுண்டு. ஏறைக்காடு என்பதும் ஏற்காடு என மருவியிருக்கலாம். ஏரிக்கரையூர் எங்குமுளது. கோடைக் கானல் நீலமலை முதலிய இடங்களிலுமுண்டு. காடு என்னும் சொல் கவனிக்கத்தக்கது. ஏர்க்காட்டிலுள்ள முதியோரையும்

வினவியறியலாம்.

கண்டகம்:

கண்டகம் என்பது ஒரு முகத்தலளவை. சேலம் மாவட்டத் திலுளது. அது 2கலமா4 கலமா என்று தெரியவில்லை. உடனே மூத்தோரைக் கேட்டுத் தேரிவிக்க. என் இசைத் தமிழ்க் கலம்பகத் தில் அது வருகின்றது. அதற்குப் பொருளும் அளவும் குறித்தல் வேண்டும்.

கண்டகம் எவ்வளவென்று தாங்கள் முன்பு எழுதி விடுத்த அட்டை காட்டுப்பாடியிலுள்ளது. அது நூலில் வருகின்றது, அளவை மறந்து போனேன். இங்கொருவர் 40 மரக்கால் என்று