பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

45

சொன்னார், சரிதானா! உடனே உழவரையும் கூல வணிகரையும் கேட்டுத் தெரிவிக்க.

கவி :

கவி என்ற வட சொற்கு வடமொழி அகர முதலியில் சரியாக மூலம் காட்டப்படவில்லை. கூ (கூவு) என்றும் கவ (கஞ்சத்தனமான) என்றும் இரு மூலங்கள் காட்டப்பட்டுள. தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் மேற்கணக்குப் (பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்) பாடல்களிலும் கவி என்ற சொல் ல்லை. கி.மு. 1300 போல் பாடப்பட்ட இருக்கு வேதத்தில் அச்சொல் உள்ளது.

வடசொற்கள் தமிழில் மிகுதியாகக் கலக்கத் தொடங்கிய பின்னரே கவி என்னுஞ் சொல் இலக்கியத்திற் புகுந்தது. 'கவிகைக் கொடுப்ப என்று சிலப்பதிகாரத்தில் வருவதால் (3.135) எ-ஆம் நூற்றாண்டினதான திவாகரத்தில் அச்சொல் குறிக்கப்பட்டுள்ளது.

க்

இந்தியும் சமற்கிருதமும் அடர்த்து வரும் இக் காலத்தில் வடசொற்களை அறவே களைந்து தமிழை முழுத் தூமைப் படுத்தல் வேண்டும். அல்லாக்கால் தமிழில் செய்யுளை அல்லது பாவைக் குறிக்கச் சொல்லில்லை யென்றே இந்தியரும் வடவரும் கருதி இகழ்வர்.

கிழக்கு மேற்கு :

கீழ்-கீழ்க்கு-கிழக்கு.

மே-மேல்-மேற்கு.

குமுகாயம்:

கும்முதல்=கூடுதல்

குரு :

குமுகம்-சமூகம்(வ)

ஆயம்=பெருங் கூட்டம்

குமுகம்+ஆயம்

=

குமுகாயம் (மரூஉப்புணர்ச்சி) சமுதாயம்(வ)

குருவிக் கோல் என்ற சொல் அகர முதலியில் இல்லை. இலக்கியத்திலும் வந்துளதாகத் தெரியவில்லை.

குருவிக்கல்=செம்மண், செந்நிறக்கல்.