பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

புலம் :

புலநெறி வழக்கம்.

49

புலம்

=

இலக்கணம்.

"புலந் தொகுத்தோனே போக்கறு பனுவல்”

என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர அடியை

நோக்குக.

பெரும்பாடு:

(சிரமப்பட்டுச் செய்தல்) = பெரும்பாடு. பெரும்பாடு என்னுஞ் சொல் பெண்டிர் விடாயிறைப்பைக் குறித்தாலும், பெரும்பாடுபட்டுச் செய்தான் என்னும் வழக்குண்மையால் அச்சொல்லையே நாம் அப்பொருளில் வழங்கலாம்.

உழப்பு என்னுஞ் சொல், ஒத்த பொருளதேனும் இலக்கியச் சொல்லும் அருஞ் சொல்லுமாக உள்ளது. உழத்தல் = வருந்தி யுழைத்தல். உழந்தும் உழவே தலை.

பொற் பிறப்பு :

ஏம கர்ப்பம் என்பது பொதுவாக இரணிய கர்ப்பம் எனப்படும். ஹேமம்=பொன். ஹிரண்ய=பொன். கர்ப்பம்-பிறப்பு. இரணிய (ஏம) கர்ப்பம்=பொற் பிறப்பு. பொன்னால் ஆவுருவம் செய்து அதனூடு புகுந்து வரும் அரசனுக்கு (க்ஷத்திரியனுக்கு)ப் பிராமணப் பிறப்பைத் தரும் சடங்கு. சடங்கின்பின் அப் பொன்னே பிராமணப் பூசாரிக்கு அளிக்கப்படும். இது இரணிய (ஏம) கர்ப்பதானம் எனப்படும். இத்தகைய பெருங் கொடைகள் 24 வகை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை வேந்தரும் பேரர சரும்தாம் செய்யமுடியும். திருவாங்கூர் அரசர் ஒவ்வொருவரும் தாம் முடிசூடியபின் இத்தானம் செய்துள்ளனர். தஞ்சை நாயக்க மன்னருள் இறுதியாயிருந்த விசயராகவ நாயக்கரும் இதைச் செய்தார். ஓர் ஆள் ஊடுருவுமளவு பொன்னுருவம் செய்ய எத்தணைப் பொன் வேண்டியிருந்திருக்கும்!

துலை நிறை :

பிராமணர் பெற்ற இன்னொரு வகைப் பெருங் கொடை துலை நிறைத் தானம் (துலாபாரம்) இவற்றால் ஏராளமான பொன்னை அரசர் கருவூலங்களினின்று பிராமணர் சுறண்டிக் கொண்டனர். இவையெல்லாம் பொதுமக்கள் பணம் ஆரியரால்