பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

படிகளையும் திருத்திக்கொள்க. இறுதிப்படிவம் விரைந்து இரவில் அடிபட்டதால் திருத்தவியலாது போயிற்று.

பிழையின்மைச் சிறப்பு

10

இதுவரை நான் வெளியிட்டவற்றுள் பிழையின்றிச் சிறப்பாய் வருவது (தமிழ் வரலாறு).

முந்தியவற்றில் மேல் :

11

மூவர் இவ்விருமுறை பார்த்தும் நாலைந்து பிழைகள் நேர்ந்து விட்டன. ஆயின் முந்திய நூல்களை நோக்க இது (தமிழ் வரலாறு) எவ்வளவோ மேல் என்று சொல்லவேண்டும். 12

விடுபாடு:

நூல் பாதி அச்சாகியிருந்துபோது வடமொழி வரலாற்றிற் குப் பணம் குன்றிவிடுமோ என்னும் அச்ச மிகுந்துவிட்டதனால், பல பகுதிகளை விரிவாக விளக்காததுடன் சில பகுதிகளை நீக்கியும் விட்டேன். அதனாலேயே யானைப் பெயர்கள் சிலவும் விடப்பட்டுப் போயின.

எத்தனை முறை பார்ப்பினும் சிலர் கண்ணிற்குச் சில பிழைகள் தப்பியே விடுகின்றன அதனால் அடுத்த நூல்களுக்கு ஐவரை அமர்த்த விருக்கிறேன். மேனாடுகளில் எழுவர்க்குக் குறையாது திருத்துவதாகத் தெரிகின்றது.

பிழையும் குறையும் :

13

தமிழ் வரலாற்றில் நேர்ந்துள்ள இரு பிழைகளையும் ஒரு குறையையும் பின் வருமாறு திருத்திக் கொள்க.

பக்கம் வரி

பிழை

143

20

நாடு

66

21

வளநாடு

199

6

தேங்கு-தேக்கம்

66

7

திருத்தம்

வளநாடு

நாடு

ஆகு-ஆக்கம்

தேக்கம் -தேங்குதல் ஆக்கம்-ஆகுதல்

239 யானைப் பெயர் வரிசையில் எறும்பி, கடிவை,. தூங்கல், தோல்,. பெருமா, பொங்கடி, மருண்மா, மதங்கம், மதாவளம், மொய் என்பவற்றைச் சேர்த்துக்கொள்க.

10.14-2-66 (மி.மு.சி) 12.11-3-67 (மி.மு.சி)

11. 7-1-67 (மி.மு.சி) 13.22-3-67 (மி.மு.சி)