பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

10. தனித்தமிழ் கழகம்

உ.த.க. எனப்படும், ‘உலகத் தமிழ்க் கழகம்' பாவாணரைத் தலைமையாகக் கொண்டு அவர் கொள்கையைப் பரப்புதற்கு ஏந்தாக அமைக்கப்பட்ட அமைப்பாகும். அதற்கும் முன்னோடி யாக அமைந்த தனித் தமிழ்க் கழகம் என்பதாம். உ.த.க. தோன்றிய போது த.த.க. அதனுள் இயைந்தது. அல்லது, த.த.க. உ..க.வைத் தோற்றுவித்து அதனோடு ஒன்றியது.

தனித் தமிழ்க் கழகந் தோன்றிய வகையை விளக்கும் பாவாணர் கடிதம் 15-4-64.

66

இலால்குடிக் கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் புலவர் சேந்தமாங்குடியார் 1960 ஆம் ஆண்டே, அண்ணாமலை ல நகர் வந்து தமிழ்நாட்டில் தனித் தமிழ்க் கழகம் தோற்றி விரிவுபடுத்த வேண்டு மென்று என்துணை வேண்டினார். யான் இசைந்தேன். மூவாண்டு ஒன்றும் தெரியவில்லை. இன்று திருச்சி மாவட்டம் பல வட்டங்களில் தனித் தமிழ்க் கிளைகள் தோன்றி ஈராயிரம் உறுப்பினர் (ஆட்டைக் கட்டணம் அரை ரூபா கட்டிச்) சேர்ந்திருப்பதாகவும் வைகாசி 4 (17-5-64) ஞாயிறன்று என் தலைமையில் துறையூரில் முசிறி வட்டத் தொடக்க விழா நடத்த விருப்பதாகவும் பிற மாவட்டங்களிலும் கிளைகள் தோற்றி நாளடைவில் மாநில மாநாடு நடத்துவதாகவும் எழுதியிருக் கின்றார். இதுவே மறைமலையடிகள், நாவலர் சோ.சு.பா. வும் நானும் கண்ட கனா. பர். அரச மாணிக்கனாரும் இத்தகைய அமைப்பையே விரும்பினார்.. உறுப்பினரும், உழவரும் மாண வரும் பெரும்பாலாரெனத் தெரிவிக்கின்றார், சேந்தமாங்குடி யார். இவ் வியக்கம் தமிழகம் முழுதும் பரவின் தமிழுக்கும் தமிழனுக்கும் நற்காலம் அண்ணணித்தே. எதிர்காலத்தில் ஆட்சியையும் கைப்பற்றித் தமிழாட்சி நிறுவ இயலும் இதை நண்பர்க்குத் தெரிவித்து மாநாட்டுக்கு வர மாநாட்டுக்கு வர இயலின் வரச் சொல்க.

கற்றாரையே கொண்டிருக்கும் கழகம் விரிவடைய முடியாது. பொதுமக்களும் மாணவரும் பெருவாரியாகச் சேர்ந்தால்தான்