பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

69

சாத்தையன்' என்று மாற்றுக” என எழுதுகின்றார் (16-10-79). L பாவாணர் வழியே ஏற்பட்ட தனித்தமிழ்ப் பற்றால் அவர் தம் பெயரைத் தமிழ்க் குடிமகனாகவே மாற்றிக்கொண்டார். அவர் பணி செய்யும் கல்லூரி யாதவர் கல்லூரி என்பதன்றோ! ‘யாதவர்” என்னும் சொல் 'தமிழன்றே' என்று எண்ணிய பாவாணர், “யாதவர் கல்லூரி என்பதைப் பொதுவர் கல்லூரி’ என்று மாற்றிவிடுக. அது தமிழாகவும் இருக்கும். குலப்பெயர் கொண்டதாகவும் இருக்கும் அதே சமயத்தில் தமிழினம் முழு வதையும் தழுவும் பொது நோக்கினதாகவும் இருக்கும் குமரி நாட்டினின்றும் வடபாற் சென்ற முல்லை மாந்தரே கண்ணன் முன்னோர். அவருள் முதல்வன் ‘யது’ . யது வழியினர் யாதவர்.. உண்மையில் பொதுவர் என்பதே யாதவர் என்பதினும் சிறப் புடையதாகும். முதியோரிடம் விளக்கிச் சொல்க' என்று எழுதினார்.

99

பறம்புக் குடியில் உலகத் தமிழ்க் கழக மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. அம் மாநாட்டு இசையரங்கிற்கு வேலூர் "கஜலட்சுமி' அவர்கள் அழைக்கப்பட்டனர். அதனை "இசை யரங்கிற்கு வரும் வேலூர் அம்மையார் பெயர் கஜலட்சுமி. "கஜலட்சுமி' என்னும் ‘வேழத் திருமகள்' என்று நிகழ்ச்சி நிரலில் குறித்தல் வேண்டும்” என்றார்.

புலவர் 'சையத் தாசுத்தீன்' என்பவர் ஒருவர். அவர் பெயரை அச்சமய மொழி வழியில் மொழி பெயர்த்து 'நெறி முடியார்' என்று குறிப்பிட்டார் பாவாணர்.

மு

மதுரை மாமன்ற உறுப்பினரும் தமிழன்பரும் பாவாணர் மேல் மட்டற்ற பற்றுடையவரும் ஆகியவர் திரு. கருணைதாசன். அவர், தமிழ்ப் பாவையின் ஆசிரியரும் ஆவர். பாவாணரைச் சிறப்பிக்கு முகத்தான் தமிழ் எழுத்தாளர் மன்றச் சார்பில் மணிவிழா எடுத்துப் பொற்கிழியும் வழங்கினர். எழுத்தாளர் மன்றத் தலைவர் பர்.மெ.சுந்தரனார். பொருளாளரும் புரவலரும் திரு. மனோகரனார்! மூவர் பெயர்களும் தமிழாக அமைய வில்லை. ஆதலால், பாவாணர் எழுதினார்.

“முதலாவது தங்கள் பெயரை அருள், அருளையன், அருளப்பன், அருளாளன், அருளன், அருளுடையான், யான், அரு ளாண்டான் என்பவற்றுள் ஒன்றாக மாற்றிக்கொள்க.'

66

99

ஆரியப் பெயர் தாங்கி ஆரியம் அல்லது பிறமொழி கலந்து பேசுவதாலேயே, ஆரியரும் வடவரும் தமிழரைத் தாழ் வாய்க் கருதி இந்தியைப் புகுத்தினர். அதைத் தமிழர் ‘எதிர்க்க