பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

12. திருச்சித் தமிழ்ப்புலவர் கழகம்

தமிழ்ப் புலவர் கழகம் என ஓர் அமைப்பைத் திருச்சியில் உருவாக்கப் பாவாணர் விரும்பினார். அவ்விருப்பையும், அமைப்பு முறை நோக்கம் பயனீடு ஆகியவற்றையும் கழக ஆட்சியாளர் வ.சு அவர்களுக்கு விரிவாய் எழுதினார்.

பாவாணரொடும் தக்க புலவர்களொடும் கலந்து தமிழறிஞர் கழகம் என ஒரு கழகத்தை வ.சு அவர்கள் அமைந்திருந்தார்கள். இத்தகு அமைப்புகளெல்லாம் ஒன்றுபட்டுக் கடனாற்றின் வலிவும் பொலிவும் ஆமென்னும் கருத்தும், புலவரெல்லாம் ஒன்றுபட்டு செயலாற்றினாலன்றி விழுமிய பயனெய்தாது என்னும் தெளிவு பாவாணார்க்கிருந்ததாகலின் அவ் வேட்கை வெளிப்பட விரிவாகக் கடிதம் எழுதினார். அக்கடிதம் :

பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சி.

23-10-41

அன்பார்ந்த ஐயா,

நலம்: நலமாக.

தமிழறிஞர் கழகத் திட்டம் தீர்மானமும் பற்றிய சுவடிகளும் விண்ணப்பத்தாள்களும் கைவயம்.

இங்கே, திருச்சித் தமிழ்ப்புலவர் கழகம் என்ற கழகத்தை அமைத்து அதன் கூட்டம் ஒன்றில் வருகிற டிசம்பர் (1941) 20 -ம் 21-ம் சனி ஞாயிறுகளில் இங்கே சென்னை மாகாண 3 -வது தமிழ்ப் புலவர் மாநாடு கூட்டுவதெனத் தீர்மானித்து வேலையும் தாடங்கிவிட்டோம். மாநாட்டுத் தலைமை தாங்குமாறு செட்டி நாட்டு இளவரசரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் பதில் வரவில்லை.

முதல்நாட்காலை தலைவர், திறப்பாளர், கொடியேற்று பவர். வரவேற்புத் தலைவர் ஆகிய நால்வரின் சொற்பொழிவு களும் மாலை, தீர்மானங்களும் தமிழ்ப் புலவர் கழக உட்கழக அமைப்புகளும், மறு நாட்காலை தொல்காப்பிய மாநாட்டில் நடைபெறும்.