பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

75

தமிழ்ப் புலவர் மாநாடு, கடிதத்தில் திட்டமிட்டவாறு இரண்டு நாள்கள் நடைபெறவில்லை. 21-12-41 ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே நிகழ்ந்தது. திரு. ச.சோ. பாரதியார் தலைமை யிலேயே நிகழ்ந்தது.

காலை 8 மணிக்குப் பேரா. கா.சு.பிள்ளை தமிழ்க் காடியேற்றி உரையாற்றினார். 8 1/2 . மணிக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். மாநாட்டுத் திறப்புரையாற்றினார். 9 மணிக்குப் பாவாணர் வரவேற்புரை நிகழ்த்தினார். 10 மணிக்குப் பாரதியார் தம் தலைமை யுரையையாற் றினார் . அவ்வளவுடன் காலை நிகழ்ச்சி நிறைந்தது.

இடைவேளைக்குப் பின் மாலை 3 மணிக்குத் திரு. மகிழ் நரும் பெருஞ் சொல் விளக்கனார் திரு. சரவண முதலியாரும் உரையாற்றினர். தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதர் நன்றி கூறினார்.கூட்டம் இரவு 8 மணியளவில் முடிவெய்தியது. 1

1

43 ஆண்டுகளுக்கு முன்னே நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் எவை என்பதும், அவற்றுள் எவை எவை இந்நாள்வரை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும், இன்றைய நிலையென்ன என்பதும் அறிந்துகொண்டு சிந்திப்பதற்கு வாய்ப்பாம் என்னும் கருத்தால். அவற்றைக் காண்க:

தீர்மானங்களுள் ஒன்றும் பதினைந்தும் முறையே இரங் கலும், அமைப்புக் குழுவினர் பெயருமாம். எஞ்சிய தீர்மானங்கள் பதினான்கும் நம் சிந்தனைக்குரியவை.

2.

3.

4.

தமிழல்லாத பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்கும் ஆசிரியர்கள் போதிய தமிழ்ப் பயிற்சி யுடையவராதல் வேண்டுமென்று இம் மாநாடு கல்லூரி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழறியாதவர் நிரம்பிய சாத்திரியார் கலைச் சொற்குழுவை உடனே கலைத்துவிட்டுத் தக்கார் பலரை அவ்விடத்தில் அமைக்க வேண்டுமென இம்மாநாடு அரசியலாரைக் கேட்டுக்கொள்கிறது.

புத்தகக் குழுவார் தமிழுக்கும் தமிழ் மாணவருக்கும் ஏற்காத பாடத் திட்டங்களை அமைக்காதவாறு அவர்களுக்கு எடுத்துக்கூறச் செட்டிநாடு 'இளவரசர் அ. முத்தையாச் செட்டியார், பி. ஏ., எம்.எல்.சி’ 1. செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 19: 445