பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

13. வாசகர் பணி

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாவாணர்க்கு வாசகர் (Reader)பணியமர்த்தம் வாய்த்தது. ஆங்கு அமர்ந்ததும், தேராதூன் பயிற்சிக்குச் சென்றதும், திரும்பியதும், பணி நிலையும், எய்ப்பில் வைப்பும் பிறவும் சில கடிதங்களால் விளக்க மாகின்றன.

கல்லூரிப் புறவீடு, குமாரசாமிப்பட்டி, சேலம் 4-7-56

“எனக்கு இறையருளால் அண்ணாமலைப் ப.க. கழகத்தில் திராவிட மொழியாராய்ச்சித்துறை வாசகர் (Reader) பதவி கிடைத்துள்ளது. அடுத்த வாரம் அங்குச் செல்கிறேன். சம்பளத் திட்டம் 250-25-500 தான். அடுத்த ஆண்டில் நடுவண் அரசிய லாரும் 250 உரூபா கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது

"பேராசிரியராக அண்ணாமலையில் ஒருவரையும் அமர்த்த ல்லை. நான்தான் வேலையைத் தொடங்கி நடத்திவருகிறேன்”” 7, கொற்றவன்குடி, விரிவுரையாளர் குடியிருப்பு, அண்ணாமலைநகர், 15-9-56

66

“திராவிட மொழியாராய்ச்சித் துறைக்குரிய ஐவருள் வாசகராக (Reader) நான்தான் அமர்த்தப்பட்டுள்ளேன். பேராசிரியர், மலையாள கன்னட தெலுங்கு விரிவுரையாளர் ஆகிய நால் வரும் அடுத்த ஆண்டில்தான் அமர்த்தப்படுவார்கள். அகராதி வேலையும் அதன் பின்புதான் தொடங்கும். இன்று அதற்கு முற்படையான வேலைசெய்து வருகிறேன். அதாவது செந்தமிழ்ச் சொற்பிறப்பு நெறிமுறைகளைத் தொகுத்தல். அது 200 பக்கத் திற்குக் குறையாது. ஒரு தனி நூலாய் வரும்.

66

‘என் அலுவல் தொடர்பாக ஒரு திறவோர்குழு சட்டர்சி தலைமையில் அமைக்கப்பெற்றுள்ளது. சென்னையிலாவது இங்காவது அடிக்கடி கூடும்” 2

1. 621..

வ.சு.

2. வசு