பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

79

“டேராடூனில் மே4 ஆம்நாள் அல்லது 6 ஆம் நாள் தொடங்கி 6வது வாரம் பூனா டெக்கான் மொழிநூற் பள்ளியின் (Deccan School of Linguistics) சார்பாக ஓர் அமெரிக்க மொழி நூற்பள்ளிக்கு (Summer School of Linguistics) திரு. இராதா கிருட்டிணனும் யானும் அனுப்பப்பெறவேண்டும் என்று எம் மொழிநூல் திறவோர் குழு பரிந்துரைத்திருப்பதால் அண்ணா மலை ப.க.க. சார்பில் யாம் இருவேமும் மே முதல்வாரம் ஆங்குச் செல்லவிருக்கிறோம். 3

66

9, D.H.V. College Hostel, Dehradun, 4-5-57

இம்மாதம் முதல்நாட் காலை 11 மணிபோல் புதுடில்லி வந்து சேர்ந்தோம். புதுடில்லியிலிருந்து டேராடூன் வண்டி இரவு 10.10 மணிக்குத் தான் புறப்பட்டது. அதிலேறி இங்கு நேற்றுக் காலை 8 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

66

சன்னையில் இருந்து புதுடில்லி வரையும் மாரிநாள் வீட்டிற்குள் இருப்பது போல் வசதியாக இருந்தது.

66

இங்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. செலவுதான் மிகுதி. அதோடு சமையல் முறையும் மிக வேறுபட்டுள்ளது. ஒரு பஞ்சாபியின் உண்டிச் சாலையில் உண்கிறேன்.

“எம் பள்ளி இன்று பெயரளவில் தொடங்கிற்று. வருகிற திங்கள் கிழமையில் இருந்துதான் (6-5-57) வகுப்புகள் ஒழுங்காய் நடக்கும்.

4

“26 ஆம் நாள் புதுடில்லியில் இருந்து மாலை 5 மணிக்கு இன்னியல் (Deluxe)வண்டியேறி அங்குச் சென்னை நடுவண் நிலையம் 28 ஆம் ஆட்சை (தேதி) காலை 10 மணிக்கு வந்து சேர்வேன். இங்கு வந்ததினால் ஓரளவு பயனுண்டு.

L

5

“நம் கழக 36 ஆம் ஆண்டுவிழா மலர்க்கு எழுதித்தந்த அமெரிக்க மொழிநூல் என்னுங் கட்டுரையை வெளியிட வேண்டாம். அதனால் எனக்கு இன்னல் விளையும் என்று தெரிகின்றது. '

6

3. 13-4-57 (வ.சு)

5. 13-4-57 (வ.சு)

4. 6.1.0.

வ.சு.

6. 1-10-57 (வ.சு)