பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

66

'நான் இம்மாதம் 27,28,29, ஆகிய நாட்களில் தில்லியில் நடக்கும் அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டிற்குச் சென்னை யில் 24 ஆம் நாள் தடிவழி விரைவான் (Grand Trunk Express) காலை 10 மணிக்கு ஏறிச் செல்வேன்.”7

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளவரை ஆரியத்திற்கு மாறான என் ஆராய்ச்சி நூல்களை வெளியி முடியாது. அதினின்று விலகிய பின்னரே முடியும்.

66

8

"உத்தரப் பிரதேச (U.P) முசாபர் நகர் (Mujaffir nagar) நின்று உனியல் என்னும் சமற்கிருதப் பேராசிரியர் மகளார் பிராமணர்,கர்கிஉனியல் (Gargi uniyal) என்னும் பெயரினர். 20 ஆண்டகவையர்5/2அடிக்குட்பட்டவர்.காதில் பொன்வளை யத்தர். சமற்கிருத எம்.ஏ., பட்டத்தினர். இங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமற்கிருத ஆராய்ச்சி மாணவராக வரு கிறார். அவர் தந்தையாரும் தமையனாரும் எனக்குப் பழக்கமான தினால் அவரைச் சென்னையுல் இருந்து அழைத்து வருமாறு முன்னரே சொல்லியிருக்கின்றனர். ஆதலால் ஆளனுப்பி இயலு மாயின் தாங்களே நேரில் சென்று Grand Trunk (பெருந்தடி வழி) Janatha (மக்கள்) இரு ரு வண்டியிலும் பார்த்து, வந்திருப்பின் அழைத்துச் சென்று எனக்குத் தொலைவரியில் தெரிவிக்க. இதை எங்ஙனமும் தப்பாது செய்க”9

"நான் அண்ணாமலை நகரை விட்டு நீங்கி இங்குக் குடி புகுந்து விட்டேன்" வேலூர்த் தானியங்கியகம், காட்டுப்பாடிச் சாலை, வேலூர் வடார்க்காடு மாவட்டம் 10

“அண்ணாமலைப் பல்கலைக் கழக எய்ப்பில் வைப்புப் பணம் பெறும் நாள் நெருங்கிவர இருக்கின்றது. நான் தேராதூன் மொழியியற் பயிற்சிப் பள்ளிக்கு வாங்கின 500 உரூபாவிற்குக் கணக்குக் கொடுத்தால் மீதப் பணத்தைக் கழித்துக்கொண்டு எச்சத் தொகையை எனக்கனுப்ப ஏற்பாடு செய்வதாக நேற்றுத் திரு. முருகரத்தினத் திடம் ஒரு முடங்கல் கொடுத்தனுப்பினார் பேரா. கோவிந்தராசனார். நான் அதற்கிசைந்து வழிச் செலவுப் படிப்படிவம் (T.A. Bill)வாங்கியனுப்புமாறு கேட்டிருக்கிறேன்”.!!

7.10-12-57 (வ.சு) 9. 20-7-57 (வ.சு)

8. 9-2-59 (621.)

10. 30-9-61 (வ.சு)

11.13-12-66 (மி.மு.சி)