பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

81

அண்ணாமலைப் பல்கலைக்கழக பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் ஆகிய நிலைகளுக்கும் சில முறை முயன்றுள்ளார் பாவாணர். வாசகர் வாய்ப்புக் கிட்டியும் அவர்தம் தனித்தமிழ்க் கடைப்பிடியும், குமரிக் கண்டக் கொள்கையும், தமிழ் ஆரியத் திற்கு மூலமும் அடிமணையுமாம் என்னும் தீர்வும் அவர் ஆத்ம ஆர்வக் கோளான அகர முதலிப் பணியைச் செய்ய வியலா வண்ணம் தகைந்த. அம்மட்டோ ‘செந்தமிழ் நெறி முறைகள்' என அவர் தொகுத்த தொகுப்பும் தமிழ் கூறு நல்லுலக வள மாகும் வாய்ப்பும் இன்றி ஒழிந்தது. பணி செய்யாமைக் குற்றம் சாற்றப் பெற்றமையும், அதன் மறுப்பும் தென்மொழிக் கட்டுரை கைளாக வெளிப்பட்டமை ஆர்வலர் அறிந்தனவே.