பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

14. உலகத் தமிழ்க் கழகம்

தனித்தமிழ் இயக்கம் பல்லவபுரம் தவத்திரு மறைமலை யடிகளார் வளமனைப் பூங்காவில் 1916 ஆம் ஆண்டு அரும்பியது. பின்னே 1960இல் தனித்தமிழ் கழகமாக உருக்கொண்டது. உருக் கொண்ட திருச்சியிலேயே, 2968 இல் உலகத் தமிழ்க் கழகம் கிளர்ந்தது. அதன் குறிக்கோட் பண்புகளாக எண்மை (எளிமை, (Simpicity)ன தன்னலமின்மை((Selflessness), உண்மை(Sincerity), தொண்டு (Service) ஈகம்(Sacrifice) என்பன அமைந்தன.

கழகத் தலைவர் பாவாணர்; பொதுச் செயலாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்; பொருளாளர் செந்தமிழ்க் கிழார்.

முதலாட்டை மாநாடு பறப்புக் குடியில் நிகழ்ந்தது; அதன் பொறுப்பாளர் பேராசிரியர் தமிழ்க் குடிமகனார்; இரண்டாம் ஆட்டை விழா மதுரையில் நிகழ்ந்தது (1971).

உ.த.க. பற்றிய சில அரிய குறிப்புகள்:

“தென்னிந்தியா முழுதும் உ.த.க. கிளைகளைத் தோற்று வித்தல்” வேண்டும். (8.7.78)

“மொழி வகையிலன்றி வேறொன்றிலும் நான் தலை யிடேன்” (8-7-78)

“யார் யார் எவ்வெத் தனிக் கருத்துக் கொண்டிருந்தாலும் தமிழைப் பொறுத்த மட்டில் நாம் அனைவரையும் தழுவிக் கொண்டே செல்வோம்" (1-5-79)

66

உ.த.க. விற்கு மதவியற் கொள்கையில்லை. கடவுளை நம்புவாரும் நம்பாதவரும் ஒருவரை ஒருவர் குறை கூறாது அதில் இருக்கலாம்”.

தென்மொழிக் கொள்கையாகிய தமிழ் நாட்டுப் பிரி வினை உ.த.க.கெள்கையன்று”. (3-6-80)

இவை பேரா.கு. பூங்காவனம் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் உள்ள சில குறிப்புகள்)