பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

66

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

ஆரியம் உலகெங்கும் எத்துணை ஆழ வேரூன்றியிருக் கின்றதென்பதும் அதைக் கல்லி எடுப்பது எத்துணை மலை பெயர்ப்பு முயற்சி என்பதும் என் பொத்தக நிலையத்தைப் பார்த்தால்தான் தெரியவரும். கடந்த அரை நூற்றாண்டாக இப்பணிக்கு என்னைத் தகுதிப்படுத்தி வருகின்றேன். ஆதலால் உ.த.க. என் துணையின்றி இயங்காது.’

"மாவட்ட அமைப்பாளர் பதவி, கல்வி அதிகாரி பதவியும், பொதுச் செயலாளர் பதவி, அவருடைய கணக்கர் பதவியும் போன்றன இவற்றுள் முன்னதே உயர்ந்தது.” (31-5-72)

இவை பேரா. தமிழ்க் குடிமகனார்க்கு எழுதப்பெற்ற கடிதங்களில் உள்ள குறிப்புகள்.

24-7-80இல், உலகத் தமிழ்க் கழக உறுப்பினர்க்கு அறிவிப்பு ஒன்று வழங்கியுள்ளார் பாவாணர். அது வருமாறு:

அருந்தமிழ்ன்பர்காள்,

ஒவ்வொர் இயக்க வளர்ச்சிக்கும் அதற்குரிய ஒரு சிறப் பிதழ் இன்றியமையாதது. அதனாலேயே பெரியார் “குடியரசு 'விடுதலை' என்னும் இதழ்களுடன் தம் இயக்கத்தை நடத்தி வந்தார்.

உ.த.க. இதழாயிருந்த தென்மொழி சில கரணியங்களால் நின்றுவிட்டது. இன்று அதற்குப் பகரமாக வெளிவருவது மீட்போலை ஒன்றே. தனித் தமிழைக் குறிக்கோளாகக் கொண் டுள்ள வேறு இரண்டோரிதழ்கள் இருப்பினும் அவற்றிற்கும் மீட்போலையையே உறுப்பினர் அனைவரும் முதன்மையாக வாங்குதல் வேண்டும். ஒவ்வோர் உ.த.க கிளையும் ஒருபடி வாங்குதல் இன்றியமையாதது. கிளையில்லா விடத்தில் தனித் தமிழ்ப் பற்றாளர் தனித்தோ இணைந்தோ ஒவ்வொரு படி

வாங்கலாம்.

கிளைகளும் தனி உறுப்பினரும் இன்றிருந்து படியொன் றிற்கு ஆண்டிற்கு 5 (ஐந்து) உரூபா மேனி முன்பணமாக அனுப்பி விடுக. செல்வராயிருப்பவர் தமித்தும் வாங்கி இதழாசிரியரை ஊக்கலாம். படிகள் பெருகப் பெருக இழப்புக் குன்றும். இதழும் வளர்ச்சியடையும். தாள் விலை மிக ஏறியுள்ள இக்காலத்தில் 5 உரூபா உயர் தொகையன்று.

5

தமிழர் சிறுபான்மையராகவும் பெரும்பாலும் எளிய ராகவும் வாயில்லாதவராகவும் ஆரியச் சார்புமிக்க ஒரு திராவிட