பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

15. அகரமுதலி ஆக்கமும்

திருத்தமும் அமர்த்தமும்

அகரமுதலிப் பணிக்காகவே தம்மை இறைவன் படைத்த தாகச் சற்றும் ஐயுறவின்றிச் சாற்றியவர் பாவாணர். அவர்தம் உரையாடலிலும் கடிதங்களிலும் நிரம்பக் குறிப்புகள் அக்கருத் துப்பட உள்ளன. அகரமுதலியின் அமைப்பு சீர்மை, அருமை, பயனீடு, அதன் பணியானர் தகவு, சொற் பிறப் பகர முதலியின் அருமை பெருமை, பிறமொழி அகர முதலிகளின் செய்திகள் கியனவெல்லாம் தனிநூலாம் அளவுக்கு விரிந்துள்ளன. அவற்றைத் தனி நூலாக்கல் தகவேனும் கடிதத் தொகுப்புகளுள் அவற்றுக்கு இடமில்லா தொழித்தல் சால்பன்று என்பதால் சில செய்திகளை அறியலாம்:

“சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இல்லாத சொற்களை இன்று தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.

997

“சென்னை அகரமுதலியைத் திருத்தாது தமிழைக் காக்கவோ வளர்க்கவோ முடியாது. அதை நான் ஒருவன்தான் திருத்த முடியும் . நான் இளைஞனல்லேன். கண்ணொளி வேறு குன்றி வருகின்றது. மிகப் பிந்திவிட்டால் என் ஆராய்ச்சியையும் அறிவையும் பயன்படுத்த முடியாது. தமிழனுக்குத் தமிழே உயிர்நாடியானது. மட்ட அரிசி விலையில் அரைக்கால் உரூபா குறைந்ததினால் தமிழனுக்குப் பெருநன்மை ஏற்பட்டுவிடாது. தமிழுக்கு அடிப்படையான வேலை செய்யாவிட்டால் தமிழக அரசுத் தலைமைச் செயலகம் என்னும் பலகையை எந்தக் கட்சியும் ஒரு நிமையத்தில் எடுத்துவிடலாம்.'

“என் நூல்களுள் தலைசிறந்ததும் வேறெவரும் செய்ய முடியாததும் தமிழன் தலைமையை நிலைநாட்டுவதும் அவ்வகர முதலி ஒன்றே. என ஆராய்ச்சியின் முழு விளைவும் அஃதே.’

223

"மாதம் 1500 உரூபா தந்தால் மூவாண்டிற்குள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலிச் சீர்திருத்தம் முடிந்துவிடும். என்னைத்

1. 9-2-59 (வ.சு)

3. 18-9-67 (வி.அ.க.)

2. 20-5-67 (மி.மு.சி)