பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

87

தவிர வேறெவரும் செய்யவியலாது. என்காலத்திற்குப் பின் 6 எவரும் வருந்திப் பயனில்லை. அத்திருத்தமோ தமிழ் வளர்ச்சிக்கு ன்றியமையாதது.”4

“சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலித் திருத்தத் தின் இன்றியமையாமை, என் மூப்பு, என் கண்ணொளி குன்றி வருகை. வேறொவரும் இத்தொண்டைச் செய்யமுடியாமை கியவற்றை அவர்கள் (ஆட்சியாளர்) கடுகளவும் கருதிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. தமிழனுக்கு அரிசி போன்று தமிழும் இன்றியமையாததே”5

"தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள் ஆதலாலும், எனக்கு மூப்பு மிகுந்து வருவதாலும், செ.சொ. அகர முதலித் தொகுப்பே என் போர் வெற்றிப் படைக்கலமாதலாலும் இதுவரை ஒரு பகுதியும் வெளி வரவில்லையென்று சட்டசவையிற் பேசப்படுவதாலும் முதன் மடல முதற்பகுதி அச்சேறும் நிலைமையில் இருப்பதாலும், பேராமதிவாணனார் தவிர வேறொரு துணைவரும் இன்மை யாலும் இன்று வீட்டை விட்டு வெளியேற முடியாவண்ணம் வேலை மிகுந்துள்ளது”

66

226

இறைவன் என்னையே இறுதித் தொண்டனாக அமர்த்தி யிருப்பதால் இனிமேல் அகர முதலிப் பணியிலும் தமிழ்ப் போராட்டத்திலுமே ஆழ்ந்து ஈடுபடவொண்ணும்”7

"செ.சொ. அகலமுதலி முதற்பகுதியேனும் மாநாட்டிற்குள் வெளிவரல்வேண்டும். ஆங்கில நூலும் வெளிவரின் தமிழுக்கும் தமிழினத்திற்கும் செ.சொ.அ. அலுவலகத்திற்கும் எனக்கும் ஏற்படும் ஆக்கத்தையும் நன்மையையும் அளவிடமுடியாது:

1. திருக்கோயிலில் வடமொழி வழிபாடும், பிராமணர் பிறப்புயர்வும் ஒழிந்துபோம்.

2.

3.

4.

தமிழ் தழைத்தோங்கும்; தமிழினம் ஒன்றுபட்டுத் தலையெடுக்கும்.

உலகப் பல்கலைக் கழகங்கள் எல்லாவற்றிலும் தமிழ் கற்பிக்கப்படும்: தமிழ்ப் பேராசிரியர் பதவியும் பதவியும் தோன்றும்.

தமிழ் நாட்டு வரலாறும் உலக வரலாறும் மாற்றி வரையப்படும்.

4. 27-12-67 (வி.அ.க.)

6. 21-9-78 (கு.பூ)

5. 5-4-67 (வி.அ.க.)

7. 5-7-79 (கு.பூ)