பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தமிழ் வரலாறு

வந்தது என்னும் வினைவடிவு தொழிற்பெயராயும் வழங்குவது போல், செய்து என்னும் பண்டை வினைமுற்று வடிவும் தொழிற் பெயராயும் வழங்கியிருத்தல் கூடும். வந்தால்=வந்ததினால், வருகை யால். ஓடியால்-ஓடினால்=ஓடினதினால். போயியால்-போயினால் போனதினால்.

=

கால் என்பது காலத்தைக் குறிக்கும் சொல்லே; ஆயின், வலிமிக்குப் புணரும். செய்தகால்=செய்த காலம். செய்தக்கால்= செய்தால். கண், கடை என்பனவும் எதிர்கால வினையெச்ச வீறாய் வரும். எ-டு: செய்தக்கண், செய்தக்கடை. கண், கடை என்பன டப்பெயர்கள்.

துவ்வீறு புணர்ச்சியில் டுறு வாகத் திரியுமாதலால், செய்து என்பது உண்டு, சென்று என்பவற்றையும்; செய்தென என்பது உண்டென, சென்றென என்பவற்றையும்; செய்தால் என்பது உண்டால், சென்றால் என்பவற்றையும்; செய்தக்கால் என்பது உண்டக்கால், சென்றக்கால் என்பவற்றையும் தழுவும். குறிப்பு வினையெச்ச வீறுகள்:

அ து

து-று

ஆய்

ஆக க

எ-டு : வலிய, மெல்ல.

எ-டு : சிறிது, பெரிது.

எ-டு : நன்று.

எ-டு: அழகாய்.

விரைவாக.

எ-டு :

எதிர்மறை யிடையிலைகளும் ஈறுகளும்

எதிர்மறை வினைமுற்று:

இ. கா.

நி.கா.

செய்திலன்

செய்கின்றிலன்

செய்ததில்(லை) செய்கின்றதில்(லை)

எ.கா.

செய்கிலன்-இல் இடைநிலை)

செய்வதில்(லை)- இல் (லை) (ஈறு)

செய்யவில்லை

செய்யவில்லை

செய்யவில்லை-

இல்லை (ஈறு)

இல், இல்லை என்னும் இரண்டும், இயல்பாக எதிர்மறைப் பொருள் காண்ட துணைவினைகளே. இவற்றை ஏனைப் பாலிடங்கட்கும் ஒட்டுக.

ல், இல்லை என்பன ஈறாய் வரின், இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாம். செய்யவில்லை என்னும் எதிர்மறை முற்றும் இங்ஙனம் பொதுவாம்.