பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ix

முகவுரை

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”

இவ்வுலகில் தமிழனைப்போல முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனு மில்லை. முதன்முதல் நாகரிக விளக்கேற்றி நானில முழுதும் அகவொளி பரப்பியவன் தமிழனே. தெற்கில் இராயிரங் கல் தொலைவு நீண்ட பரந்திருந்த (தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி நாடும் அடங்கிய) குமரிக் கண்டம் இந்துமாவாரி யென்னும் தென்பெருங்கடலில் மூழ்கிய பின், முதலிரு கழகப் பல்துறைப் பல்லாயிரம் தனித்தமிழ் நூல்களுள் கடல் கோள்களாலும் ஆரியராலும் அழிக்கப்பட்டு மூவாயிரம் ஆண்டு ஆகியுள்ள இன்றும், இருநடைப்பட்ட மொழி யமைப்பிலும், முத்திறப்பட்ட இலக்கண வடிப்பிலும், இசை நாடக வளர்ச்சியிலும், நாற்பொருள் தழுவிய அறவியல் இலக்கியத் திலும், பண்பாட்டுச் சிறப்பிலும், தமிழ்நாட்டிற் கொப்பாக வேறெந்தநாடு மில்லை.

ஆயினும், பகுத்தறிவைப் பயன்படுத்தாது மூவேந்தரும் எளிய ஓரிரயலாருக்கும் இழிவகை யடிமைப்பட்டுப் போன தினால், அவரைப் பின்பற்ற நேர்ந்த பொதுமக்களின் வழிவந்த இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும், தம்மைத் தாமே தாழ்த்து வதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும்,தம்மருமைத் தனிமொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச் செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும், ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர்.

பிராமணன் தெய்வப் பிறப்பின னென்றும், சமற்கிருதம் ஏனை மொழிகட் கெல்லாத் தாயான தேவமொழி யென்றும், இரு நச்சுக் கருத்துகளை மூவாயிரம் ஆண்டாகத் தமிழருள்ளத்தில் மேலும் மேலும் பசுமரத்தாணிபோல் அறைந்து பதிக்கப்பட்டு,