பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

தழுவிய வனப்பியலும், தமிழின் இனிமையையும்; பொருண்மொழிப் பாக்களும் அரசியல் நூலும் அறநூலும் மெய்ப்பொருள்நூலும் தமிழப் பண்பாட்டின் நேர்மையையும் காட்டும்.

அகப்பொருட் டுறைகளின் இனிமையை நுகர்ந்தே, மாணிக்க வாசகர் யாவையும் பாடியபின் கோவையும் பாடி, அதில்,

66

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்

சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ........

(திருக்கோ. 20)

என்று, தம் சிறப்பான ஈடுபாட்டைக் குறிப்பாகத் தெரிவித்தார்.

இரும்புக்காலத்தில், வெண்பா முதலிய நால்வகைப் பாக்களுள் முதல் இரண்டின் கலப்பால் மருட்பா என்னும் கலவைப் பாவும், கலிப்பாவின் திரிபால் பரிபாடல் என்னும் திரிபாவும் தோன்றின. இசை, நாடகம், மருத்துவம், சமையல், கணக்கு, கணியம், ஏரணம், மறை, மெய்ப்பொருள் முதலிய பல்துறைக் கலைகளும் அறிவியல் களும்பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பியலும் தோன்றியிருத்தல் வேண்டும். மொழியுடன் இசையும் நாடகமும் இணைக்கப்பட்டு, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கும் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஐந்திணைச் சொற்களும் சேர்ந்து, தமிழ் பெருவளம் பெற்றிருந்தது.

தலைக்கழகம்

முத்தமிழும் ஒருங்கே கற்ற புலவர் நூற்றுக்கணக்கினர் தோன்றி யதனால், பழைய இலக்கியத்தை ஆராயவும் புதிய இலக்கியத்தை இயற்றவும், பாண்டியன் பஃறுளி யாற்றங்கரை மேலிருந்த மதுரை யென்னும் தன் தலைநகரில் ஒரு கழகம் நிறுவினான். அதன் உறுப்பினர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினாரென்றும், அவராற் பாடப்பட்டன முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் பல பரிபாடலும் பிறவுமென்றும், அக் கழகத்தை நடத்தி வந்த பாண்டியர் காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்றும், அவருட் பாவரங்கேறினார் எழுவ ரென்றும், அக் கழகம் இருந்த கால நீட்சி நாலாயிரத்து நானூற்று நாற்பதாண்டென்றும் இறையனா ரகப்பொருள் உரையிற்

சொல்லப்பட்டுள்ளது.