பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




83

அக் கழக வுறுப்பினர் பெயர்கள் இறந்துபட்டன. அகத்தியர் டைக்கழகக் குலைவிற்குப்பின் வடநாட்டினின்று வந்த ஆரியர். முதலிரு கழக வுறுப்பினரும் தூய தமிழராவர். சிவன் பெயரும் முருகன் பெயருங் கொண்ட இருவர் தலைக்கழக வுறுப்பினரா யிருந்திருக்கலாம். முரஞ்சியூர் முடிநாகராயர் கி.மு. பத்தாம் நூற்றாண்டுப் பாரத காலத்தவர். நிதியின் கிழவன் என்பது. வடதிசைத் தலைவனைக் குறிக்கும் தொல்கதைக் கட்டுப்பெயர்.

தலைக்கழகம் கி. மு. 10,000 போல் தோன்றியது. அக் காலத்து மக்கள் இக்காலத்தாரினும் மிக நீண்டு வாழ்ந்திருப்ப ராதலால், சராசரி ஆளுக்கு 50 ஆண்டு வைத்துக்கொள்ளின், 86 பாண்டி யருக்கும் 4450 ஆண்டாகும். முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால நீட்சி 4440 ஆண்டு. இது முற்றும் பொருத்தமானதும் நிகழ்ந்திருக்கக் கூடியதுமாகும்.

தலைக்கழகத்திற்கு அளவை நூலாயிருந்த மாபிண்ட நூற் பெயரும் மறைந்துவிட்டது. அகத்தியம் ஒரு மாபிண்டமாயினும், டைக்கழகத்திற்குப் பிற்பட்டதாதலின், தலைக்கழக நூலாயிருந் திருக்கமுடியாது. எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூற் றிலக்கணமுங் கொண்ட இயற்றமிழ் நூல் பிண்டம்; இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலக்கணமுங் கொண்ட நூல் மாபிண்டம். ஒவ்வொரு தமிழும் இலக்கணம் இலக்கியம் என்னும் இருபாற் பட்டது. முத் தமிழ்க்கும் இலக்கணம் ஒரே நூலாயிருக்கும்; ஆயின், இலக்கியம் வெவ் வேறு வனப்புகளாகவும் பனுவல்களாகவும் இருக்கும். இயற்றமிழிலக் கணப் பொருட்கூற்றில் யாப்பும் உவமை யென்னும் அணியும் அடங்கும்.

தலைக்கழகம் வரலாற்றிற் கெட்டாத தொன்மையதாதலால், அதைப்பற்றிய வண்ணனையிற் சில விளத்தங்கள் கி.பி.6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட வுரையில், தவறாகக் குறிக்கப் பட்டிருப்பது இயற்கையே.

தலைக்கழகம் தொடங்கியபின், உலகியற் கலைகளும் அறி வியல்களும் வளர்ந்து வந்ததுபோன்றே, மதவியல் ஆராய்ச்சியும் ஆழ்ந்து வளர்ந்தது. சிவநெறிக்கும் திருமால் நெறிக்கும் மேற்பட்ட, கடவுள் நெறியென்னும் பொது நெறியும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் சிறுதெய்வ வணக்கத்தையும், புலமக்கள் பெருந்தேவ மதத்தையும், துறவியர் கடவுள் நெறியையும் கடைப்பிடித்தனர்.

ஆயின், காளி போர்வெற்றித் தெய்வமாகவும் அம்மை நோய்த் தெய்வமாகவுங் கருதப்பட்டதனால், நாளடைவில் ஐந்திணைப் பொதுத் தெய்வமானாள். தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டி

டி