பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




87

நால்வாய், பகடு, புழைக்கை-பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மறமலி, மாதிரம், மொய், வழுவை, வாரணம், வேழம் முதலியன.

முகத்திற் செம்புள்ளி யுள்ளது சிந்துரம் அல்லது புகர்முகம். முருகன் ஊர்தி பிணிமுகம். ஆண்யானை களிறு; பெண்யானை பிடி. அயல்நாட்டினின்று வந்த குதிரையினத்தையும், பத்திற்கும் மேற்பட்ட வகையாகப் பிரித்தமை முன்னர்க் கூறப்பட்டது.

ப ன

தமிழ்மொழி, தனக்குரிய வீடு என்னுஞ் சொல்லை மட்டுமன்றி, இல் என்னுந் தெலுங்குச் சொல்லையும், மனை யென்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (Finnish) மொழிகட்கும் பொதுவான குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக்

கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் தமிழ்ச்சொல் வளத்தைப் பாராட்டிக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

கொடை வேண்டற் சொற்கள்:

“ ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே'

தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே.

கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே.'

(தொல். 928)

(தொல். 929)

(தொல்.930)

ஒன்றைச் சொல்லும் வகையைப்பற்றிமட்டும் முப்பதிற்கு மேற்பட்ட வினைச்சொற்கள் உள. 'தமிழ் வரலாறு' பார்க்க.

விலக்கிய

குமரிநாட்டுத் தமிழ் ஓரிலக்கம் சொற்களைக் கொண்டிருந்தது. நாட்டு முழுக்கினாலும், முதலிரு கழக அழிவினாலும், பாதிச் சொற்கள் இறந்துபட்

அந்

செம்மை

ன.

எழுத்துகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும், ஒலியும் பொருளும் திரிக்காதும் சிதைக்காதும் இலக்கண நெறியிற் பேசுவது செம்மை. செம்மை தவறியது கொடுமை. செம்மையான தமிழ் செந்தமிழ். கொடுமையான தமிழ் கொடுந்தமிழ். தமிழை என்றுஞ் செந்தமிழாகவே வழங்கவேண்டு மென்பது, தொன்னூ லாசிரியர் இட்ட நிலையான வரம்பு. அவ் வரம்பினாலேயே, கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரியர் எத்துணையோ கேடு செய்திருப் பினும், தமிழ் இன்னும் அழியாது இருந்துவருகின்றது.

தெலுங்கில் னகர வீற்றை டகர வீறாகவும், கன்னடத்திற் பகர முதலை ஹகர முதலாகவும், மலையாளத்தில் மெலியடுத்த வல் லெழுத்தையும் மெலியாகவும் வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தில் ழகரத்தை யகரமாகவும் ஒலிப்பது ஒலித்திரிபான கொடுந்தமிழாம்.