பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்பு என்பவற்றை, முறையே, செப்பு, திப்பு, நிப்பு, பப்பு எனத் தெலுங்கில் திரிப்பது சொற்றிரிபான கொடுந்தமிழாம்.

‘என்னது ஆகின்றது?' என்பதை எந்தாணு என்றும், 'நான் செய்யவேண்டும்' என்பதை ‘ஞான் செய்யேணம்' என்றும் மலை யாளத்தில் திரிப்பது சொற்றொடர்த் திரிபான கொடுந்தமிழாம்.

6

விடைசொல்லுதல் என்னும் சிறப்புப் பொருளுள்ள செப்புதற் சொல்லைச் சொல்லுதல் என்னும் பொதுப் பொருளில் தெலுங்கில் திரிப்பதும், ஆய்ந்து பார்த்தல் என்னும் சிறப்புப் பொருளுள்ள நோடுதற் சொல்லைப் பார்த்தல் என்னும் பொதுப் பொருளிற் கன்னடத்தில் திரிப்பதும், புதுப்பெருக்கு நீர் என்னும் சிறப்புப் பொருளுள்ள வெள்ளம் என்னும் சொல்லை நீர் என்னும் பொதுப் பொருளில் மலையாளத்தில் திரிப்பதும், பொருட்டிரிபான காடுந்தமிழாம்.

இக்காலத்துப் பேராசிரியர் சிலர் உலக வழக்கிற்கும் கொச்சை வழக்கிற்கும் வேறுபாடறியாது, வச்சிருக்கோம் (வைத்திருக்கிறோம்) என்பதை உலகவழக்காகக் கொள்வர்.

66

66

நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.

வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டாக லான

99

99

(தொல்.1589)

(தொல்.1592)

என்பவற்றைக் கண்டும் அவர் உணர்வதில்லை. பொதுமக்களுள் ஒரு சாராரான கீழ்மக்கள் பேச்சையுந் தழுவவேண்டு மெனின், அவர் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டியதாகும். இது உயர்ந்தோர்க் குடம் பாடன்று. செய்யுள் வழக்கிற்கும் உலக வழக்கிற்கும் சிறிது வேறுபாடிருப்பினும், இரண்டும் செந்தமிழ் வழக்கேயென்றும், செம்மை தமிழின் உயிர்நாடிப் பண்பென்றும், தமிழுக்கு வழுநிலை யானவை திரவிட மொழிகட்கு வழாநிலை யாகுமென்றும், அத னாலேயே அவை தனிமொழிகளாக வழங்குகின்றனவென்றும் அறிதல் வேண்டும்.

மரபு

66

எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே.

(நன்.388)