பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




89

ளமை, ஆண்பால், பெண்பால், விலங்குக் காவலர், உறுப்புகள், வினைகள், கழிபொருள் முதலிய பல்வகைப் பொருளும் பற்றி, பண்டை மேன்மக்கள் எச் சொற்களை வழங்கினரோ அச் சொற்களையே வழங்குதல் மரபாம்.

எ-டு: இளமை

மாந்தன் மகவு (குழவி, சேய், பிள்ளை), ஆட்டுக்குட்டி, மாட்டுக் கன்று, எருமைக்கன்று, நாய்க்குட்டி (குருளை), பூனைக்குட்டி (பிள்ளை), கழுதைக்குட்டி, குதிரைக் குட்டி, ஒட்டகக் கன்று, கீரிப்பிள்ளை, நாவிப்பிள்ளை, அணிற்பிள்ளை, யானைக் கன்று (கயந்தலை, முனி, களவம், குட்டி), யாளியணங்கு, புலிக்குருளை, அரிமாக்குருளை, ஓநாய்க்குருளை, கரடிக்குட்டி (குருளை), (குரு நரிக்குருளை, குரங்குக்குட்டி (குழவி, பார்ப்பு, பறழ், மகவு), மான்குட்டி (கன்று), காசறைக்கரு, வெருகுப்பிள்ளை, எலிக்குட்டி (குஞ்சு), தேட்குஞ்சு, பாம்புக்குட்டி.

ஆமைப் பார்ப்பு (குட்டி),நண்டுக் குஞ்சு (பார்ப்பு), மீன் குஞ்சு, கெண்டைக் கசளி, அயிரைப் பொடி, முதலைக்கன்று.

பறவைக் குஞ்சு (பார்ப்பு), கோழிக்குஞ்சு, காக்கைக் குஞ்சு, கீரிப்பிள்ளை, கொக்குப்பிள்ளை, வண்டுப்பார்ப்பு, புழுப்பார்ப்பு, பேன்செள், வேப்பங்கன்று, வாழைக்கன்று (கருந்து), தென்னம் பிள்ளை, பனைமடலி (வடலி), நெல்நாற்று.

ஆடு, மான், கழுதை, குதிரை ஆகியவற்றின் இளமைப் பெயர் ஆடு,மான், மறியென்று செய்யுள் வழக்கில் வழங்கினும், உலக வழக்கில் அச் சொல் அவற்றின் பெண்பாற் பெயராகவே வழங்கிவருகின்றது. ஒ.நோ.E. mare, OE. mere (பெண்குதிரை).

6

சிறுமியைக் குட்டி யென்பதும், கடைச்சனை அல்லது கடைப் பிள்ளையைக் கடைக்குட்டி யென்பதும் இழிவழக்காம்.

ஊண்வினைகள்

நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும் காற்றால் வாய்க்குள் இழுத்தல்.

நீர்ப்பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.

உறிதல்,

உறிஞ்சுதல்

குடித்தல்

பருகுதல்

நீர்க்கலத்திற் பற்படக் குடித்தல்.

அருந்துதல்

- சிறிது சிறிதாகக் குடித்தல்.

மண்டுதல்

மண்டியுட்படக் குடித்தல்.

மாந்துதல்

- பேரளவாகக் குடித்தல்.