பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தூய்மை

செம்மை போன்றே தூய்மையும் தமிழின் உயிர்நாடிப் பண்பாம். வெளிநாடுகளினின்று வந்த பொருள்கட்கெல்லாம், அவற்றின் சிறப்பியல்பு நோக்கி உடனுடன் தமிழ்ப்பெயர்கள் இடப்பட்டன.

எ-டு: அடைக்காய்(பாக்கு), அண்டிமா (முந்திரி - cashew), உருளைக்கிழங்கு, ஒட்டகம், கரும்பு, கழுதை, குச்சுக்கிழங்கு ஆழ்வள்ளிக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கொம்புக் கிழங்கு, சவரிக் கட்டை, மரவள்ளிக்கிழங்கு), குதிரை, செந்தாழை (pineapple), புகையிலை, புகைவண்டி, பேரீந்து, மிதிவண்டி, மிளகாய், முந்திரி (கொடிமுந்திரி - grape), வான்கோழி.

காள் காள் என்று கத்துவது கழுதை.

தமிழின் இயல்பை அறியாதார் சிலர்,

CC

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்

மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் முடிய வந்த அவ்வழக் குண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே

(தொல்.1568)

என்பதைப் பிறழவுணர்ந்து, தமிழில் வரைதுறையின்றிப் பிற மொழிச் சொற்களை வழங்கத் தொல்காப்பியம் இடந்தந்து விட்டதாகக் கூறுவர். இந் நூற்பாவிலுள்ள சொற்களெல்லாம் தூய தமிழ்ச் சொற்களே யென்பதையும், அவற்றுட் சில சிறிதே பொருள் திரிந்தவை யென்பதையும் அவர் அறிந்திலர். கடுவன் என்பது கணவன் என்பதன் திரிபு. கணவன் என்னுஞ் சொல் அஃறிணையிலும் வழங்கும்.

CC

வங்காக் கடந்த செங்காற் பேடை

எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது

(குறுந்.151)

என்பதை நோக்குக. கோட்டான் மரக்கொம்பில் அல்லது பொந்தில் வாழ்வது. தத்தை இலைகளிலும் ஓலைகளிலும் தொத்தி நிற்பது. தொத்து-தொத்தை-தத்தை. தொத்தை-தோத்தா (இந்தி). பூசை என்பது வீட்டுப் பூனையின் பெயர். சேவல் என்பது பறவை