பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

உயிரையுடைய மெய். ‘பிராணி' என்னும் வடசொல் வழக்கினால், உயிர்மெய் என்னுஞ் சொல்லின் பொருள் மறைந்தது.

ஒலியின் நிலைமையையே உருவத்திலுங் காட்டுவதற்கு, உயிர்மெய்க்கு மெய்யுருவமும் உயிர்க்குறியுஞ் சேர்ந்த தனிவடி வமைத்தார். இவ் வமைப்பு முதன்முதல் தமிழிலேயே ஏற்பட்டது. உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அவற்றொடு உயிர்மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதிக்கு நெடுங்கணக்கு என்றும் பெயர். இவை உறவுக் குறியீடுகளாதலால் (Relative Terms), ஒருங்கே தோன்றினவை யாகும்.

மேலைநாடுகள் உட்படப் பிறநாட்டு வண்ணமாலைக ளெல்லாம் (Alphabets) குறுங்கணக்கே. சப்பானிலும் எத்தியோப்பி யாவிலும் உள்ள அசையெழுத்துகளும் (Syllabaries),

மெய்யின்மையால் நெடுங் கணக்காகா.

மேனாட்டுக் குறுங்கணக்கெல்லாம் ஒழுங்கின்றி உயிரும் மெய்யுங் கலந்திருப்பதால், தமிழ்க் குறுங்கணக்குப்போல் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட முறையைக் (order) காட்டுவதில்லை. சொல்லின் மூவிடத்திலும் எந்த எழுத்தும் வரலாமாதலால், முதனிலை இடைநிலை இறுதிநிலை என்னும் இடவரம்பும் மேலை மொழி யெழுத்துகட் கில்லை. சொற்கள் நீண்டகாலமாக மேன்மேலுந் திரிந்து திரிந்து உருமாறி, துருப்பிடித்த இருப்புக் கருவிகள்போல் உறுப்புப் பிரிக்கமுடியா திருப்பதால், பகுசொல் லமைப்பும் சொற்புணர்ச்சியும் ஆகிய எழுத்தின் புறத்திலக் கணங்களும் பெரும்பாலும் மேலை மொழிகட் கில்லை. ஆகவே, பத்துவகை யகமும் இருவகைப் புறமும் ஆகிய பன்னீரெழுத் திலக்கணங்களும் நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே.

எழுத்திலக் கணமே யீரா றவைதாம் எண்பெயர் முறைபிறப் புருவம் அளவே முதலீ றிடைநிலை போலி யகமாம்

கிளவியும் புணர்ச்சியுங் கிளப்பின் புறமாம்.

மாத்திரை என்பதும் தென்சொல்லே. அது இன்று

ருமொழிப் பொதுவாய் மயக்கத்திற் கிடமாயிருத்தலின், அளவு என்னும் ஐயுறவற்ற தென்சொல் இங்கு ஆளப்பட்டது. குமரிநாட்டார் பொதுவாக எஃகு செவியராயிருந்தமையின், கண்ணிமையளவான ஒரு மாத்திரையின் அரையளவொடு காலளவையும் எழுத்தொலி களிற் கண்டறிந்தனர்.