பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




97

தமிழில் எழுத்துத் தோன்றிய காலம் கி.மு. 10,000. வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குட் புகுந்த காலம் கி.மு. 1500. அவருக்கு எழுத்தில்லை. அவர் வேதம் நீண்ட காலமாக எழுதாக் கிளவியாகவே யிருந்தது. தென்னாடு வந்து தமிழரொடு தொடர்பு கொண்டபின், தமிழெழுத்தைப் பின்பற்றிக் கிரந்த எழுத்தை அமைத்துக் கொண்டனர். அதன்பின், கிரந்த எழுத்தை அடிப்படையாகக் கொண்டு, வடநாட்டில், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் 11ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், தேவநாகரி தோன்றிற்று. தமிழ் நெடுங்கணக்கையும் எழுத்திலக் கணத்தையும் தழுவி, எழுத்து முறையும் உயிர்மெய்த் தனிவடிவும் சொற்புணர்ச்சியும், முதற்கண் சமற்கிருதத்திலும் பின்னர் ஏனை ன யிந்திய மொழிகளிலும் ஏற்பட்டன. கால்டுவெலார் தமிழ் அல்லது தமிழர் வரலாற்றை அறியாமையால், தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத வண்ண

மாலையைத் தழுவியதென்று தவறாகக் கூறிவிட்டார்.

கி.மு.3ஆம் நூற்றாண்டில், அசோகன் கல்வெட்டுப் பிராமி யெழுத்து, தமிழகத்துப் புகுந்தது. அதனின்றே வட்டெழுத்துத் தோன்றிற்று. ஆரியர் தம் தமிழொழிப்புத் திட்டத்தை அடிப்படை யினின்று தொடங்கியதால், மூவேந்தரும் ஆரிய அடிமையராய்ப் போன பிற்காலத்தில், தமிழ்நாட்டுக் கல்வெட்டில் வட்டெழுத்துப் புகுந்திருக்கின்றது. தமிழுக்கும் வட்டெழுத்திற்கும் யாதொரு தொடர்பு மில்லை. இன்றுள்ள தமிழெழுத்துத் தொன்றுதொட்டு வருவதே.

தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி

99

(நன்.98)

என்று 13ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் கூறுதல் காண்க. எகர ஒகரமெய் புள்ளி நீங்கியதும், ஏகார ஓகாரமெய் இரட்டைச்சுழிக் கொம்பு பெற்றதும், ஏகாரவுயிர் கீழிழுப்புக் கொண்டதுமே பிற்காலத்து வேறுபாடாம்.

1968-ல் சென்னையில், வையாபுரிகள் குழுச்சார்பாக நடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாட்டில், ஒரு தமிழ்ப் பகைவர், தமிழெழுத்து அசோகன் கல்வெட்டுப் பிராமி லிபியினின்று தோன்றியதென்று கட்டுரை படித்துவிட்டதனாற் கலங்கற்க. இலக்கணத்தின் முந்தியது இலக்கியம்; இலக்கியத்தின் முந்தியது எழுத்து; எழுத்தின் முந்தியது மொழி. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்றும், திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் அதுவேயென்றும், மொழியாராய்ச்சி முரசறைந்து முழக்குகின்றது.